மோடி கடிதம் வீடுவீடாக விநியோகம்

புதுடெல்லி: பிப்ரவரி 24-
மேற்கு வங்​கத்​தில் பேர​வைத் தேர்​தல் நடைபெறவுள்ள நிலை​யில், பிரதமர் மோடி எழு​திய “ஜாய் மா காளி” கடிதம் வீடு​வீ​டாக விநி​யோகிக்​கப்​படு​கிறது.மேற்கு வங்க சட்​டப்​பேர​வைக்கு விரை​வில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையொட்​டி, பிரதமர் நரேந்​திர மோடி பெங்​காலி மொழி​யில் எழு​தி​யுள்ள ‘ஜாய் மா காளி’ (Joy Maa Kali) கடிதம் நேற்று முதல் வீடு வீடாக விநி​யோகிக்​கப்படு​கிறது. இதன் இந்தி மொழிப் பதிப்​பும் இணை​ய தளத்​தில் பகிரப்​பட்​டுள்​ளது. மேற்கு வங்க மாநிலம் பின்​தங்​கிய நிலைக்கு சென்​றதற்கு ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ்​தான் காரணம். ‘சோ​னார் பங்​களா’ (தங்க வங்​காளம்) மக்​கள் ஏமாற்​றப்​பட்​டுள்​ளனர்.
கடந்த 11 ஆண்டுகளில் விவ​சா​யிகள், இளைஞர்​கள், பெண்​கள் மற்​றும் ஏழை மக்​களுக்​கான திட்​டங்​களை முன்​னெடுத்​து, மாநிலத்​தின் ஒட்​டுமொத்த வளர்ச்​சிக்​குத் மத்​திய அரசு முன்​னுரிமை அளித்துள்​ளதுகாளி தேவி​யின் புகழுடன் தொடங்​கி​யுள்ள அந்​தக் கடிதத்​தில் பிரதமர் நரேந்திர மோடி கூறி​யிருப்​ப​தாவது: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்​றும் டாக்​டர் ஷியாமா பிர​சாத் முகர்ஜி போன்ற பல சிறந்த ஆளு​மை​களின் தாயக​மாக வங்​காளம் விளங்​கியது. ஆனால் தற்​போதைய
சூழலில் வங்​காளத்​துக்கு ஒரு புதிய திசை தேவை.மேற்கு வங்க மாநிலம் பின்​தங்​கிய நிலைக்கு சென்​றதற்கு ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ்​தான் காரணம். ‘சோ​னார் பங்​களா’ (தங்க வங்​காளம்) மக்​கள் ஏமாற்​றப்​பட்​டுள்​ளனர். கடந்த 11 ஆண்டுகளில் விவ​சா​யிகள், இளைஞர்​கள், பெண்​கள் மற்​றும் ஏழை மக்​களுக்​கான திட்​டங்​களை முன்​னெடுத்​து, மாநிலத்​தின் ஒட்​டுமொத்த வளர்ச்​சிக்​குத் மத்​திய அரசு முன்​னுரிமை அளித்துள்​ளது.ஆனால், மாநில அரசு இதற்கு ஒத்துழைக்கவில்லை. இருப்​பினும், மத்​திய அரசால் நிதி​ அளிக்கப்பட்ட ஜன் தன்யோஜ​னா, உஜ்​வாலா யோஜனா மற்​றும் ஆயுஷ்​ மான் பாரத் போன்ற திட்​டங்​கள் லட்​சக் கணக்​கான வங்க மக்​களைச் சென்​றடைந்​துள்​ளது.