ரஃபேல் போர் விமான ஹேமர் ஏவுகணை இந்தியாவில் தயாரிக்க திட்டம்

புதுடெல்லி: பிப்ரவரி 17-
ரஃபேல் போர் விமானத்தில் பயன்படுத்​தப்​படும் ஹேமர் ஏவு​கணை​களை இந்​தி​யா​வில் தயாரிக்​கும் ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என கூறப்படுகிறது.
இந்​திய விமானப் படை​யில் பிரான்​ஸிட​மிருந்து வாங்​கப்​பட்ட ரஃபேல் போர் விமானங்​கள் ஏற்​கெனவே சேர்க்​கப்​பட்​டுள்​ளன.
இந்​நிலை​யில் மேலும் 114 ரஃபேல் போர் விமானங்​களை ரூ. 3.25 லட்​சம் கோடிக்கு வாங்க இந்​தியா முடிவு செய்​துள்​ளது. இவற்​றில் 96 விமானங்​கள் இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​படும். மீத விமானங்​கள் பிரான்​ஸிட​மிருந்து பெறப்​படும்.
இந்த விமானத்​தில் ஹேமர் ரக ஏவு​கணை​கள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன. விமானப்​படை​யில் அதி​கள​வில் ரஃபேல் போர் விமானங்​கள் இடம்​பெறும்​போது, இதில் பயன்​படுத்​தப்​படும் ஹேமர் ஏவு​கணை​களை இந்​தி​யா​வில் கூட்​டாக தயாரித்​தால் இவற்றை இறக்​குமதி செய்​யும் தேவை ஏற்​ப​டாது என இந்​தியா கரு​தி​யது. இத்​திட்​டத்​துக்கு பிரான்ஸ் ஒப்​புக் கொண்​டது.
இந்​நிலை​யில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்​ரான் 3 நாள் பயண​மாக நேற்று இந்​தியா வந்​தார். அவர் பிரதமர் மோடியை இன்று சந்​தித்​துப் பேசுகிறார். அப்​போது ஹேமர் ஏவு​கணை​களை இந்​தி​யா​வில் தயாரிக்​கும் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகலாம் என எதிர்​பார்க்​கப்​படு​வ​தாக வெளி​யுறவுத்​துறை அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. 114 ரஃபேல் போர் விமானங்​கள் வாங்​கு​வது தொடர்​பாக​வும், இந்த சந்​திப்​பில் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​படு​கிறது.‘ஹேமரின்’ சிறப்பு: இலக்கை தரைமட்​ட​மாக்​கும் என்​ப​தற்​காக இந்த ஏவு​கணைக்கு ஹேமர் (சுத்தியல்)என பெயரிடப்​பட்​டுள்​ளது. ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்போது, வானிலிருந்து தரை இலக்​கு​களை துல்​லிய​மாக தாக்க இந்த ஏவு​கணை பயன்​படுத்​தப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது. 330 கிலோ எடை​யுள்ள இந்த ஏவு​கணை,
நேவி​கேஷன் உதவி​யுடன், 60 முதல் 70 கி.மீ தூரம் வரை சென்று தாக்​கும்.
இந்த ஏவு​கணையை பிரான்​ஸில் உள்ள சப்​ரான் எலக்ட்​ரானிக்ஸ் அண்ட் டிபன்ஸ் நிறு​வனம் தயாரிக்​கிறது. இந்​நிறு​வனம் இந்​தி​யா​வில் பாரத் எலக்ட்​ரானிக்​ஸ் நிறு​வனத்​துடன் இணைந்து ஹேமர் ஏவு​கணையை தயாரிக்கும்.