Home சினிமா ரஜினியுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

ரஜினியுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

சென்னை: செப். 7-
சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தேர்தலில் இயக்குநர் சேரன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இயக்குநர் பாக்யராஜ் நிரந்தர கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், புதிய நிர்வாகக் குழுவினர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை சந்தித்து வருகின்றனர். இந்த முயற்சியில், நடிகர் கமல்ஹாசனை சந்தித்ததையடுத்து, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றனர்.தலைவர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த சந்திப்பில், கதை ஆசிரியர்களின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.
ரஜினிகாந்த், திரையுலகில் வள்ளி, பாபா போன்ற படங்களில் கதையாசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால், எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக சேருமாறு கேட்டுக் கொண்டனர். ரஜினிகாந்த் உடனடியாக அதற்கு சம்மதம் தெரிவித்தார்.
காலம் ஒதுக்கி ஆலோசனை வழங்கிய ரஜினிகாந்துக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.