ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.9 லட்சம் மதிப்புள்ள தங்க நகை 15 நிமிடத்தில் மீட்பு

சென்னை: பிப்ரவரி 27-
திரு​வள்​ளூர் மாவட்​டம், கேசவபுரம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் அருண். இவர் தனி​யார் நிறு​வனத்​தில் பணி​யாற்​றுகிறார்.
இவர் கடந்த 13-ம் தேதி காலை​யில், மீஞ்​சூரில் இருந்து சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​துக்கு மின்​சார ரயி​லில் ஏறி​னார்.
அப்​போது, கையில் வைத்​திருந்த பையை ரயில் பெட்​டி​யில் மறந்து வைத்து விட்​டு, விம்கோ நகர் ரயில் நிலை​யத்​தில் இறங்​கி​னார். பின்னர் பையை மறந்து வைத்து விட்​டதை உணர்ந்த அவர், உடனடி​யாக ரயில்வே நிலைய அலு​வலரிடம் தான் கொண்டு வந்த பையில் நகை இருப்​ப​தாக​வும், ரயி​லில் தவற விட்​ட​தாக​வும் புகார் தெரிவித்தார்.
ரயில்வே பாது​காப்புப் படை (ஆர்பிஎஃப்) போலீ​ஸாருக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. தகவலின் பேரில், ஆர்​பிஎஃப் காவலர் ராம் கில்​லாடி மீனா, திரு​வொற்​றியூர் ரயில் நிலை​யத்​துக்கு வந்​தடைந்த
ரயி​லில் ஏறி, அருணாச்​சலம் தவற​விட்ட பையை மீட்​டார்.அதில், 64 கிராம் எடை​கொண்ட நெக்​லஸ், மோதிரம், வளை​யல், பிரேஸ்​லெட், தங்க செயின் இருந்​தது. இதையடுத்​து, அருணாச்​சலத்தை வரவழைத்த ஆர்பிஎஃப் போலீ​ஸார், தங்க நகைகளை ஒப்​படைத்​தனர்.
ரயிலில் பயணி தவற​விட்ட ரூ.9 லட்​சம் மதிப்​புள்ள 8 பவுன் தங்க நகைகளை ஆர்பிஎஃப் போலீ​ஸார் 15 நிமிடங்​களில் மீட்​டுள்ளனர். இதை மீட்ட ஆர்பிஎஃப் காவலரை உயர​தி​காரி​கள், ரயில்​வே அதி​காரி​கள்​ பா​ராட்​டினர்​.