
ஆந்திரா, ஆகஸ்ட். 29- ஆந்திர மாநிலம் விஜயநகரம் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில் தடம்புரண்ட இடத்தில் பெட்டிகளை அகற்றும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தடம்புரண்ட சரக்கு பெட்டிகள் அற்றக்கப்பட்டு விரையில் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. விபத்து நடக்கும்போது மற்றொரு தண்டவாளத்தில் ரயில்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விஜயநகரம் – விசாகப்பட்டினம், விசாகப்பட்டினம் – பலாசா செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் – கோராபுட் வழித்தடங்களில் இயங்கும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.