
கோட்டா: ஜனவரி 5-
ராஜஸ்தானில் ஒரு எருமை மற்றும் அதன் கன்றுக்குட்டிக்கு 2 பேர் உரிமை கொண்டாடியதையடுத்து இந்த சர்ச்சைக்கு மருத்துவ அறிக்கை மூலம் தீர்வு காணப்பட்டது.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது: நாராயண் விஹாரைச் சேர்ந்த ராம் லால் என்பவர் தான் வளர்த்த எருமை மற்றும் கன்றுக்குட்டி ஒரு மாதத்துக்கு முன் காணாமல் போனதாக புகார் அளித்தார். அவரும் விடாமல் தேடிவந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் ராம்சந்திரபுரா மர்கியா பஸ்தியில் வசிக்கும் இந்திரஜித் கேவத் என்பவரின் கொட்டகையில் எருமை மாட்டுடன் அதன் கன்றுக்குட்டியும் கட்டப்பட்டிருந்ததை பார்த்தார்.
உடனடியாக, ராம் லால், இந்திரஜித் கேவத்தை சந்தித்து அந்த மாடுகள் தனக்கு சொந்தமானவை என்று உரிமை கோரினார். ஆனால், இந்திரஜித் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படி கிராமத்தில் இருந்து அந்த எருமையை வாங்கியதாகவும் அதற்கு தற்போது 7 வயது ஆவதாகவும் கூறினார்.
தங்களது வாதங்களை முன்வைத்தனர். ராம் லால் அந்த எருமைக்கு சுமார் 4-5 வயது ஆகிறது என்றும் அது சமீபத்தில்தான் கன்று ஈன்றது என்றும் கூறினார். அதேசமயம், இந்திரஜித் அந்த எருமைக்கு 7 வயது ஆவதாக கூறினார்.
















