Home செய்திகள் தேசிய செய்திகள் ராமர் கோயிலில் ரூ.7 கோடி திருட்டு: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

ராமர் கோயிலில் ரூ.7 கோடி திருட்டு: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

புதுடெல்லி: ஜூன் 15-
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்​கப்​படும் நன்​கொடைகள், காணிக்​கை​களில் முறை​கேடு நடந்​த​தாக புகார்​கள் கிளம்​பின. இது​வரை சுமார் 7 கோடி ரூபாய் திருடப்​பட்​டுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்ளன.
இது குறித்து நீதி விசா​ரணை நடத்த வேண்​டும் என்று சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் சிங் யாதவ் வலி​யுறுத்​தி​னார். அயோத்​தி​யில் உள்ள துறவி​கள், இதர அரசி​யல் கட்​சித் தலை​வர்​களும் விமர்சனம் செய்​தனர். இந்த விவ​காரம் குறித்து பாஜக தலை​வர் டாக்​டர் ரஜ்னீஷ் சிங், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி விசா​ரணை நடத்த வலி​யுறுத்​தி​னார்.
ஆனால், இந்த புகார்​களை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்​கட்​டளை பொதுச் செய​லா​ளர் சம்​பத் ராய் திட்​ட​வட்​ட​மாக மறுத்து வந்​தார். இந்​நிலை​யில், அறக்​கட்​டளை பரிந்​துரை​யின்​படி சிறப்​புக் குழு விசா​ரணை நடத்த முதல்​வர் ஆதித்​ய​நாத் உத்​தர​விட்​டுள்​ளார். இந்​தக் குழு​வில் லக்னோ மண்டல ஆணை​யர் விஜய் விஸ்​வாஸ் பந்த்​, ஐஜி எஸ்​.கிரண், உ.பி. நிதித் துறை சிறப்​புச் செயலா​ளர் நீல் ரத்​தன் ஆகியோர் இடம் பெற்​றுள்​ளனர். இந்த அரசு குழு விசா​ரணை நடத்தி 7 நாட்​களுக்​குள் இடைக்​கால அறிக்கை உள்​ளது. முழு விசா​ரணை​யும் 15 நாட்​களுக்​குள் முடித்து இறுதி அறிக்கை அளிக்க உத்​தர​விடப்​பட்​டு உள்​ளது. இதற்​கிடை​யில், அயோத்​திக்கு அரு​கிலுள்ள மில்​கிபூரின் ரொடைவுலி தாக்​கூரன் கிராமத்​தைச் சேர்ந்த லவ்​கேஷ் மிஸ்ரா என்​பவர் சந்​தேக வலை​யில் சிக்​கி​யுள்​ளார். இவர் சுமார் 5 மாதங்களாக காணிக்கை பணம் எண்​ணும் குழு​வில் உறுப்​பின​ராக உள்ளார். கோயில் பணி​யில் சேர்ந்​தது முதல் அவரது வாழ்க்கை முறை​யில் பெரும் மாற்​றங்​கள் ஏற்​பட்​டுள்​ள​தாகக் கிராமத்​தினர் தெரி​வித்​துள்​ளனர்.
குறிப்​பாக அவர் சமீபத்​தில் ஒரு மதுக்​கடை​யில் ரூ.50,000-க்கு ஒரே நேரத்​தில் மது​ வகைகளை வாங்​கி​யுள்​ளார். இது குறித்து கிராம​வாசிகள் ராமர் கோயில் அறக்​கட்​டளை நிர்​வாகி​களிடம் புகார் அளித்​துள்​ளனர். இதையடுத்து தாக்​கூரன் கிராமத்​துக்கு நேற்​று ​முன்​தினம் சென்ற அயோத்தி காவல் துறை, ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா பொதுச் செய​லா​ளர் சம்​பத்​ராய், உறுப்​பினர் நிருபேந்​திர மிஸ்ரா ஆகியோரிடம் விசா​ரணை நடத்​தி​யுள்​ளனர். அப்​போது, லவ்​குஷ் மிஸ்ரா வீட்​டில், மறைத்து வைக்​கப்​பட்​டிருந்த ரூ.12 லட்​சம் ரொக்​கத்​தைப் போலீ​ஸார் பறி​முதல் செய்​துள்​ளனர். ராமர் கோயிலுக்கு மாதந்​தோறும் சராசரி​யாக 8 முதல் 9 கோடி ரூபாய் வரை நன்​கொடைகள் வரு​கின்​றன. ஒரு பெரிய குளிரூட்டப்​பட்ட அறை​யில் அன்​றாடம் பக்​தர்​கள் அளிக்​கும் காணிக்கை பணம் எண்​ணும் பணி நடை​பெறுகிறது. இங்கிருந்துதான் காணிக்கை தொகை மாய​மாகி வந்​த​தாகக் கூறப்​படு​கிறது. எனினும், இது​வரை​யிலும் இப்​பிரச்​சினை​யில்​ எந்த வழக்​கும்​ பதி​வாக​வில்​லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.