
சென்னை: பிப்ரவரி 17-
ரிசர்வ் வன்கியில் (RBI Job) 650 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.58,514 சம்பளம் வழங்கப்படும். இந்தியாவில் உள்ள வங்கிகளின் வங்கியாக செயல்படுவது ரிசர்வ் வங்கி. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரிசர்வ் வங்கி நாட்டின் அன்னிய செலவாணியை பராமரிப்பது, பணக்கொள்கை வகுப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறது. ரிசர்வ் வங்கியில் வேலை (RBI Job): மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்த வங்கிக்கு தமிழகத்தின் சென்னை உள்பட நாடு முழுவதும் முக்கிய பகுதிகளில் உள்ளது. இந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பல ஆயிரங்களில் சம்பளம்,சலுகைகள் உள்ளிட்டவை கிடைக்கும். இதனால், போட்டி தேர்வர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தேர்வு அறிவிப்புகளில் ஒன்றாக ரிசர்வ் வங்கி வெளியிடும் அறிவிப்பு உள்ளது. அந்த வகையில், ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்கல்வித் தகுதி: 01.02.2026 தேதிப்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தவரை 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.அதாவது விண்ணப்பதாரர்கள் 02/02/1998 க்கு முன்பாகவோ, 01/02/2006- க்கு பிறகோ பிறந்தவராக இருக்கக் கூடாது. அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.















