ரும் 12ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி62

புதுடில்லி: ஜனவரி 7-
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட், அன்விஷா என்ற செயற்கைக்கோளுடன் வரும் 12ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
விவசாயம், நகர்ப்புற திட்டமிடல், சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு செயற்கை கோள்கள் பேருதவியாக உள்ளன.
இதற்கென தயார் செய்யப்பட்டுள்ள அன்விஷா செயற்கைக்கோள், பிஎஸ்எல்வி சி62 ராக்கெட் மூலம் வரும் 12ம் தேதி காலை 10:17 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்படுகிறது.
அன்விஷா செயற்கை கோளுடன் ஒரு ஐரோப்பிய செயற்கைக்கோள் மற்றும் பெங்களூரு, ஹைதராபாத், மொரீஷியஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட 18 சிறிய செயற்கைக்கோள்களும் சுற்றுவட்ட பாதையில் செலுத்தப்பட உள்ளன. இவ்வாறு இஸ்ரோ கூறியுள்ளது.