ரூ.1 கோடியை தட்டிச் சென்ற திருச்சூர் அதிர்ஷ்டசாலி

திருவனந்தபுரம், டிச. 18- கேரளாவில் நேற்று தனலட்சுமி டிஎல் 31 லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி திருச்சூரில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலிக்கு பரிசு அடித்துள்ளது. முதல் பரிசு வென்ற நபர் யார் என கேரள சேட்டன்கள் தேடி வருகிறார்கள். இதேபோல் இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் கண்ணூரில் டிக்கெட் வாங்கிய அதிர்ஷ்டசாலிக்கு அடித்துள்ளது. மூன்றாம் பரிசு ரூ.5 லட்சம் கோழிகோடில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது. கேரளா லாட்டரி டிக்கெட் கேரளாவில் தினந்தோறும் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட லாட்டரி டிக்கெட்டுகளும், பல கோடி ரூபாய் முதல் பரிசு கொண்ட பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது ரூ.20 கோடி முதல் பரிசு கொண்ட கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. முதல் பரிசு ரூ.1 கோடி இன்று ரூ.1 கோடி முதல் பரிசு கொண்ட தனலட்சுமி டிஎல் 31 லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நடந்தது. இதில் முதல் பரிசானது DG 280502 என்ற அதிர்ஷ்ட டிக்கெட் வென்றது. திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடாவைச் சேர்ந்த ரூபி பாபு, R 5936 என்ற ஏஜென்சி எண் மூலம் இந்த டிக்கெட் ஆனது விற்பனை செய்யப்பட்டுள்ளது.