ரூ.12,015 கோடியில் டெல்லி மெட்ரோ ரயில்: மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி, டிச. 25- பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் மத்​திய அமைச்​சரவை கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​துக்​குப் பின்​னர் மத்​திய அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறிய​தாவது: டெல்லி மெட்​ரோ​வின் 5(ஏ)-ம் கட்ட திட்​டத்​தின் கீழ் 3 புதிய வழித்​தடங்​களை கட்ட மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் வழங்கி உள்​ளது. இந்த திட்டம் 3 ஆண்​டு​களில் முடிக்கப்படும். இந்த திட்​டம் ரூ.12,014.91 கோடி​யில் செயல்​படுத்​தப்​படும். இதற்​கான நிதி​யை, மத்​திய அரசு, டெல்லி அரசு மற்​றும் சர்​வ​தேச நிறு​வனங்​கள் வழங்​கும். இவ்வாறு அவர் கூறினார்.