ரூ.25 கோடி லாட்டரி அடித்த மறுநாளே சரத் செய்த காரியம்

திருவனந்தபுரம்: அக்டோபர் 11-சமீபத்தில் நடந்த கேரள ஓணம் பம்பர் லாட்டரி சீட்டு குலுக்கலில் முதல் பரிசு ரூ.25 கோடி ஆலப்புழாவை சேர்ந்த பெயிண்ட் கடை ஊழியருக்கு அடித்துள்ளது. அந்த பணத்தை பெற்றுக்கொண்ட அவர் எந்தவித பந்தாவும் இன்றி மறுநாளே பெயிண்ட் கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். ரூ.25 கோடி பரிசு அடித்த போதிலும் எந்த பந்தாவும் இன்றி தனது வழக்கமான பணியை செய்து வருவது கேரள சேட்டன்கள் இடையே வியப்பை அளித்துள்ளது. கேரள ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. இந்த லாட்டரியில் … என்ற எண்ணிற்கு முதல் பரிசு அடித்தது. முதல் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலி யார் என்பது இரண்டு நாட்கள் கழித்து தெரியவந்தது. ஆலப்புழா அருகே உள்ள நெட்டூரை சேர்ந்த சரத் நாயர் என்பவருக்குதான் முதல் பரிசாக ரூ.25 கோடி அடித்தது கண்டறியப்பட்டது.
கேரளா லாட்டரி வின்னர் நெட்டூரில் உள்ள பெயிண்ட் கடையில் வேலை பார்த்து வந்த சரத் நாயர் முதல் முறையாக பம்பர் லாட்டரி வாங்கிய நிலையில், வாங்கிய முதல் டிக்கெட்டிற்கே பரிசு மழை கொட்டியது. ரூ.25 கோடியை வென்ற அதிர்ஷ்டசாலி இனி என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு கேரள சேட்டன்கள் மத்தியில் நிலவியது.
பரிசு அடித்த உற்சாகத்தில் இருந்த போதிலும், சரத் நாயர் மறுநாளே வழக்கம் போல தான் வேலை பார்க்கும் கடைக்கு சென்றார். “இனி இவரெல்லாம் இங்கே வேலை பார்க்க மாட்டார்… கோடீஸ்வரர் ஆகிவிட்டார்” என நினைத்த சக ஊழியர்களுக்கு வியப்பு அளிக்கும் வகையில், சரத் நாயர் அதே கடையில் வேலை பார்க்க போவதாக கூறியுள்ளார்.இங்கேயே வேலை பார்ப்பேன் ரூ.25 கோடி பரிசு அடித்த மகிழ்ச்சியில் தனது சக ஊழியர்களுக்கு இனிப்பு வாங்கி அளித்த சரத் நாயர், எப்போதும் போல தனது வேலையை செய்து வருகிறார். இது குறித்து சரத் நாயரிடம் கேட்ட போது அவர் கூறிய பதில் விவரம் வருமாறு:- “லாட்டரியில் பரிசு அடித்ததை முதலில் நான் தான் பார்த்து, எனது சகோதரரிடம் கூறினேன். இருவரும் அதன்பிறகு எண்ணை உறுதி செய்து கொண்டோம்.
பரிசு அடித்த பணத்தை என்ன செய்வது என இன்னும் முடிவு செய்யவில்லை. தொடர்ந்து இந்த வேலையை செய்வேன். பணத்தை எப்படி பாதுகாப்பாக முதலீடு செய்வது என்பது தொடர்பாக நிதி வல்லுனர்களின் ஆலோசனையை பெற உள்ளேன். நான் இப்போது பெயிண்ட் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறேன். . இந்த லாட்டரியில் ரூ.25 கோடி பெற்றிருந்தாலும், தொடர்ந்து இங்கே தான் வேலை செய்வேன்.” என்றார்