ரூ.5 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது

பெங்களூரு: பிப்ரவரி 26-
பெங்​களூரு தெற்கு துணை காவல் ஆணை​யர் லோகேஷ் ஜகலசர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:
பெங்களூரு​ பீனி​யா​வில் குட்கா வியா​பாரி​களிடம் ஜிஎஸ்டி அதிகாரி​களின் பெயரை பயன்​படுத்தி பண மோசடி​யில் ஈடுபடுவ​தாக புகார் வந்​தது.
இதுகுறித்து விசாரித்து ஜிஎஸ்டி முதன்மை ஆணையர் அலு​வலக தூய்மை பணி​யாளர்​களான நாக​ராஜ் (35), தாடா பீர் (37) ஆகியோரை கைது செய்​தோம். ஜிஎஸ்டி செலுத்​தாமல் பாக்கி வைத்​துள்ள வியா​பாரிகளை குறி​வைத்து அதி​காரி​ போல பேசி ரூ.5 லட்சம் வாங்​கி​யுள்ளனர். அவர்​களை கைது செய்து ரூ.5 லட்சத்தை பறி​முதல் செய்​தோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தா​ர்​.