ரூ.557 கோடி சொத்துகள் முடக்கம்

புதுடெல்லி: ஜூன் 30-
பண மோசடி வழக்​கில் கடந்த மாதம் கைது செய்​யப்​பட்ட ஹரி​யானா முன்​னாள் காங்​கிரஸ் எம்​எல்ஏ தரம் சிங் சோக்​கருக்கு சொந்​த​மான ரூ.557 கோடி மதிப்​பிலான சொத்​துகளை அமலாக்​கத் துறை முடக்​கி​யுள்​ளது.
இதுகுறித்து அமலாக்​கத் துறை கூறி​யுள்​ள​தாவது: பணமோசடி வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்ள ஹரி​யானா முன்​னாள் காங்​கிரஸ் எம்​எல்ஏ தரம் சிங் சோக்​கர் என்​பவருக்கு சொந்​த​மான ரூ.557 கோடி மதிப்​பிலான சொத்​துகள் முடக்​கப்​பட்​டுள்​ளன. இதையடுத்​து, இந்த வழக்​கில் முடக்​கப்​பட்​டுள்ள ஒட்​டு மொத்த சொத்​துகளின் மதிப்பு ரூ.638 கோடி​யாக அதி​கரித்​துள்​ளது.
மஹிரா இன்ப்​ராடெக் (முன்பு சாய் அய்னா பார்ம்​ஸ்) உள்​ளிட்ட இந்த வழக்​கில் தொடர்​புடைய மற்​றும் சோக்​கர் மற்​றும் அவரது உதவி​யாளர்​களுக்கு சொந்​த​மான சொத்​துகளும் இதில் அடக்​கம். குறிப்​பாக, குர்​கானில் உள்ள 35 ஏக்​கர் நிலம், பல்​வேறு செக்​டார்​களில் உள்ள வணிக மற்​றும் குடி​யிருப்பு கட்​டிடங்​கள் ஆகியவை இந்த பணமோசடி வழக்​கில் முடக்​கப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அமலாக்​கத் துறை தெரி​வித்​து உள்​ளது.
தரம்​ சிங்​ சோக்​கருக்​கு தொடர்​புடைய நிறு​வனம்​ வீடு​கள்​ கட்​டித்​ தரு​வ​தாக கூறி 3,700 பேரிட​மிருந்​து ரூ.616 கோடியை வசூலித்​து​விட்​டு வீடு​களை வழங்​காமல்​ வாடிக்​கை​யாளர்​களை ஏமாற்​றி​யுள்​ளது. மேலும்​, சோக்​கர்​ போலி ஆவணங்​களை தயார்​ செய்​து மக்​களிடம்​ திரட்​டிய பணத்​தை மோசடி செய்​தாக எழுந்​த குற்​றச்​சாட்​டைத்​ தொடர்ந்​து கடந்​த மாதம்​ அவர்​ கைது செய்​யப்​பட்​​டார்​.