வங்கதேசத்தில் இந்துக்களைகுறிவைத்து தொடரும் வன்முறை

டாக்கா: டிசம்பர் 20-
வங்​கதேசத்​தில் முக்​கிய மாணவர் இயக்​கத் தலை​வ​ரான ஷெரீப் உஸ்​மான் ஹாடி சுட்​டுக் கொல்​லப்​பட்​டதை தொடர்ந்​து, அங்கு இந்​தி​யா​வுக்கு எதி​ரான போ​ராட்​டம் தீவிரமடைந்​துள்​ளது. இந்து இளைஞர் ஒரு​வர் கும்​பலால் அடித்​துக் கொலை செய்​யப்​பட்​டார். இந்​துக்​களை குறி​வைத்து கலவரம் பரவுவ​தால் பதற்​றம் அதி​கரித்​துள்​ளது.
வங்​கதேச அரசுக்கு எதி​ராக மாணவர் அமைப்​பு​கள் கடந்த ஆண்டு நடத்​திய போராட்​டத்​தில் வன்​முறை வெடித்​தது. இதையடுத்​து, பிரதமர் பதவி​யில் இருந்து வில​கிய ஷேக் ஹசீ​னா, நாட்​டை​விட்டு வெளி​யேறி இந்​தி​யா​வில் தஞ்​சம் அடைந்​தார். இதை தொடர்ந்​து, பொருளா​தார நிபுண​ரான முகமது யூனுஸ் தலை​மை​யில் இடைக்​கால அரசு அமைக்​கப்​பட்​டு, செயல்​பட்டு வரு​கிறது.
வங்​கதேசத்​தில் 2026 பிப்​ர​வரி 12-ம் தேதி பொதுத் தேர்​தல் நடை​பெறும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில், டாக்​கா-8 தொகுதி வேட்​பாள​ராக ஷெரீப் உஸ்​மான் ஹாடி (32) என்ற மாணவர் தலை​வர் களமிறங்​கி​னார். இன்​கிலாப் மஞ்சா என்ற மாணவர் போராட்​டக் குழு​வின் மூத்த தலை​வ​ரான இவர், கடந்த ஆண்டு மாணவர் போராட்​டத்தை வழிநடத்​திய முக்​கிய தலை​வர்​களில் ஒரு​வர்.
இந்​நிலை​யில், டாக்​கா​வில் கடந்த 12-ம் தேதி பிரச்​சா​ரத்தை தொடங்​கிய இவரை, முகமூடி அணிந்த மர்ம நபர்​கள், தலை​யில் சுட்​டனர். இதில் படு​கா​யம் அடைந்த அவருக்கு டாக்​கா​வில் தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. இதில் முன்​னேற்​றம் இல்​லாத​தால் கடந்த 13-ம் தேதி ஆம்​புலன்ஸ் விமானம் மூலம் சிங்​கப்​பூர் கொண்டு செல்​லப்​பட்​டு, அங்கு உள்ள மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். தீவிர சிகிச்சை அளித்​தும் பலனின்றி ஷெரீப் உஸ்​மான் ஹாடி நேற்று முன்​தினம் இரவு உயி​ரிழந்​தார்.
இந்த தகவல் வெளி​யானதை அடுத்​து, கொலை​யாளி​களைக் கைது செய்​யக் கோரி டாக்கா உட்பட பல்​வேறுபகு​தி​களி​லும் ஆயிரக்​கணக்​கான மாணவர்​கள் போராட்​டத்​தில் குதித்​தனர். பல பகு​தி​களில் மாணவர்​கள்வன்​முறை​யில் ஈடு​பட்​டனர். ‘புரோதோம் அலோ’, ‘டெய்லி ஸ்டார்’ ஆகிய நாளிதழ் அலு​வல​கங்​கள் தீவைத்​துக் கொளுத்​தப்​பட்​டன. சட்​டேகி​ராம் பகு​தி​யில் உள்ள இந்​திய துணைத் தூதரக அலு​வல​கம் மற்​றும் இந்​திய துணை தூதரின் வீடு மீது சிலர் கல்​வீசி தாக்​கினர். இந்​தி​யா​வுக்கு எதி​ராக​வும், அவாமி லீக் மற்​றும் முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வுக்கு எதி​ராக​வும் கோஷம் எழுப்​பினர். பாது​காப்​புப் படை​யினர், கண்​ணீர் புகைக் குண்​டு​களை வீசி, அவர்​களை தடுத்து நிறுத்​தினர். அவாமி லீக் கட்​சிக்கு சொந்​த​மான இடங்​கள் மீதும் மாணவர்​கள் தாக்​குதல் நடத்தி வரு​கின்​றனர். இந்​துக்​களை குறி​வைத்​தும் தாக்​குதல் நடத்​தப்​பட்டு வரு​கிறது. இந்த நிலை​யில், இந்து இளைஞர் ஒரு​வர் எரித்​துக் கொலை செய்​யப்​பட்​டார். மைமன்​சிங் மாவட்​டம் பலுகா பகுதியை சேர்ந்​தவர் தீபு சந்​திர தாஸ் (30). இவர் தங்​களது மதத்தை அவம​தித்த​தாக கூறி 18-ம் தேதி இரவு அவரை ஒரு கும்​பல் அடித்​துக் கொலை செய்​து, உடலை தீ வைத்து எரித்​தது. இது சிறு​பான்மை இந்​துக்​கள் மத்​தி​யில் பதற்​றத்தை அதி​கரித்​துள்​ளது. இந்து இளைஞர் கொலை செய்​யப்​பட்​டதற்கு முகமது யூனுஸ் அரசு கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. ‘வங்​கதேசத்​தில் வன்​முறைக்கு இடமில்​லை. இந்த கொடூர​மான குற்​றத்​துக்கு பொறுப்​பானவர்​கள் யாராக இருந்​தா​லும், சட்​டத்​தின் முன்பு நிறுத்​தப்​பட்டு தண்​டிக்​கப்​படு​வார்​கள்’ என்று அரசு உறுதி அளித்​துள்​ளது. ‘இந்த இக்​கட்​டான நேரத்​தில், வன்​முறை மற்​றும் வெறுப்பை நிராகரிப்​ப​தன் மூலம் தியாகி ஹாடிக்கு மரி​யாதை செலுத்​து​மாறு ஒவ்​வொரு குடிமக​னை​யும் கேட்​டுக் கொள்​கிறோம்’ என்று அரசு தெரி​வித்​துள்​ளது. ஹாடி உயி​ரிழப்பு காரண​மாக, வங்​கதேசத்​தில் இன்று தேசிய துக்க நாளாக அனுசரிக்​கப்​படு​கிறது. வங்​கதேச தேசி​யக் கொடி அரைக் கம்​பத்​தில் பறக்​க​விடப்​படும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.