Home செய்திகள் தேசிய செய்திகள் வன்முறை இல்லாத தேர்தலை உறுதி செய்வோம்: தலைமைத் தேர்தல் ஆணையர்

வன்முறை இல்லாத தேர்தலை உறுதி செய்வோம்: தலைமைத் தேர்தல் ஆணையர்

புதுடெல்லி, ஏப்ரல் 22- மேற்கு வங்​கத்​தில் வன்​முறை இல்​லாத தேர்​தலை உறுதி செய்​வோம் என தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் தெரி​வித்​துள்​ளார்.மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஏப்​ரல் 23 (நாளை) மற்​றும் 29 ஆகிய தேதி​களில் இரண்டு கட்​டங்​களாக நடை​பெற உள்​ளது. வாக்கு எண்​ணிக்கை மே 4 அன்று நடை​பெற உள்​ளது.
இந்நிலையில், தேர்​தலை மேற்​பார்​வை​யிடும் அதி​காரி​களுக்கு தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் நேற்று ஒரு சுற்றறிக்கை அனுப்​பி​னார். அதில் கூறி​யிருப்​ப​தாவது: மேற்கு வங்​கத்​தில் சுதந்​திர​மாக​வும் நியாய​மாக​வும் தேர்​தல் நடை​பெறு​வதை உறுதி செய்ய தேர்​தல் ஆணை​யம் எந்த ஒரு முயற்​சி​யை​யும் விட்​டு​வைக்​காது. முறைகேடு​களைக் கட்​டுப்​படுத்​து​வதற்​கும் வாக்​காளர்​களின் நம்பிக்கையை அதி​கரிப்​ப​தற்​கும் பல்​வேறு நடவடிக்​கைகள் மேற்கொள்ளப்​பட்​டுள்​ளன. அச்​சம், வன்​முறை, மிரட்​டல் மற்​றும் தூண்டுதல்கள் இல்​லாத தேர்​தலை நடத்த இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் உறுதி பூண்​டுள்​ளது. எனவே, எந்​தவொரு தேர்​தல் முறை​கேடு​களுக்​கும் இடம் தரக்​கூ​டாது. இந்த விவ​காரத்​தில் ‘பூஜ்ஜிய சகிப்​புத்​ தன்​மை’ அணுகு ​முறையை கடை பிடிக்க வேண்​டும். அரசு ஊழியர்​கள் யாரும் தேர்​தல் செயல்​பாட்​டில் தலை​யிடக்​கூ​டாது. மாநில அரசு, உள்​ளாட்சி அமைப்புகள் அல்​லது தன்​னாட்சி அமைப்​பு​களின் எந்​தவொரு ஊழியரும் தேர்​தல் செயல்​பாட்​டில் எந்த வகை​யிலும் செல்​வாக்கு செலுத்த அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள். மேற்கு வங்​கத்​தின் ஒவ்வொரு வாக்​காள​ரும் தங்​களது வாக்கை அச்​சமின்றி செலுத்த வேண்​டும். தேர்​தல் திரு​விழா என்​பது மேற்கு வங்​கத்​தின் பெருமை. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.