வரி குறைப்பால் கார் வாங்க குவியும் மக்கள்

புதுடெல்லி: செப்.23-
மத்திய அரசு பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியினை குறைத்திருக்கிறது. இது செப்டம்பர் 22ஆம் தேதியான நேற்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்து விட்டது.
சிறிய ரக கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியும் இந்த முறை குறைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கார்களின் விலையும் குறைந்து இருக்கிறது.
இந்த சூழலில் ஜிஎஸ்டி வரி குறைப்பு நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கார்களை முன்பதிவு செய்துள்ளன கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவு ஒரே நாளில் கார்கள் விற்பனை மற்றும் கார்கள் டெலிவரி செய்யப்பட்டிருப்பதாக
மாருதி சுசுகி நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறது