வாக்காளர் பட்டியலில் பெயர்: சோனியாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

புதுடெல்லி: செப். 12-
விகாஸ் திரி​பாதி என்​பவர் டெல்லி ரோஸ் அவென்யூ மாவட்ட நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனுவை, டெல்லி மாவட்ட கூடு​தல் தலைமை நீதி​மன்ற நீதிபதி வைபவ் சவு​ராசியா நேற்று முன் தினம் விசா​ரித்​தார்.
மனு​தா​ரர் சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர், “சோனியா காந்தி இந்​திய குடி​யுரிமையை 1983-ம் ஆண்டு ஏப்​ரலில் பெற்​றுள்​ளார்.
ஆனால், அவரது பெயர் டெல்லி சட்​டப்​பேரவை தொகுதி வாக்​காளர் பட்​டியலில் 1980-ம் ஆண்டே இடம்​பெற்​றுள்​ளது.1980-ம் ஆண்டே வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க போலி ஆவணங்​களை அளித்​திருக்​கக் கூடும். எனவே, சோனியா காந்​திக்கு எதி​ராக வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்க உத்​தர​விட வேண்​டும்” என்று வாதிட்​டார்.வாதங்களைக் கேட்ட நீதிபதி இந்த மனுவை தள்​ளு​படி செய்து பிறப்பித்த உத்தரவில், “தேர்​தல் ஆணை​யத்​தின் அதி​காரத்தை இந்த நீதி​மன்​றம் எடுத்​துக் கொள்ள முடி​யாது.
தேர்​தல் ஆணை​யம், மத்​திய அரசின் அதி​கார வரம்பு சார்ந்த குடி​யுரிமை விவ​காரத்​தைப் புகார் அளித்து விசா​ரிக்க கோர முடி​யாது” என்று தெரி​வித்​தார்