விஜய் ரூபானியின் கடைசி புகைப்படம்

அகமதாபாத், ஜூன் 13-
இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினர், நண்பர்களை சந்தித்துவிட்டு, பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியான அனுபவங்களுடன் லண்டன் புறப்பட்ட பயணிகள் மற்றும் குஜராத்தில் படிக்கும் 10 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துவிட்டனர். அவர்களின் எதிர்கால கனவுகளை தீக்கிரையாக்கியது துரதிருஷ்டவசமான விமான விபத்து.குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் கடைசி புகைப்படம்: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் கடைசி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை சக பயணி ஒருவர் எடுத்ததாக கூறப்படும் நிலையில் அதுகுறித்து உறுதிப்படுத்தப்படவில்லை.
ரூபானி லண்டனில் உள்ள தனது மனைவி மற்றும் மகளைச் சந்தித்துவிட்டு மனைவி அஞ்சலியுடன் மீண்டும் இந்தியா திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது கத்தை ஏற்படுத்தியுள்ளது.