விதிகளை மீறி பணம் பெறும் 18 லட்சம் தம்பதி

புதுடெல்லி: அக். 14-
பிஎம் கிசான் திட்​டத்​தில் கணவனும், மனைவி இரு​வரும் பணம் பெற்​றுள்​ள​தாக சர்ச்சை எழுந்​துள்​ளது. இந்த திட்​டத்​தின்​படி குடும்​பத்​தில் ஒரு உறுப்​பினர் மட்​டுமே இந்த சலுகையை பெற தகு​தி​யானவர். என்​றாலும் கணவர், மனைவி என இரு​வருமே பயன்​பெற்​றுள்​ளது மத்​திய வேளாண் அமைச்​சகம் நடத்​திய ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்​டாரங்​கள் கூறிய​தாவது: பிர​தான் மந்​திரி கிசான் சம்​மான் நிதி (பிஎம்​-கி​சான்) திட்​டத்​தின் 31.01 லட்​சம் பயனாளி​கள் குறித்து ஆராயப்​பட்​டது. அதில் 17.87 லட்​சம் பேர் கணவன்​-மனைவி என உறு​திப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.
இந்த திட்​டத்​தின்​படி குடும்​பத்​தில் ஒரு​வர்​தான் பயனாளி​யாக இருக்க வேண்​டும் என்ற விதி உள்​ளது. இருப்​பினும், கணவன்​-மனைவி இரு​வரும் ஒரே நேரத்​தில் பணப் பலன்​களை இந்த திட்​டத்​தின் மூலம் பெற்​றுள்​ளனர். இது விதி​முறை​களை மீறிய செய​லாகும்.
இதையடுத்​து, மத்​திய வேளாண் அமைச்​சகம் தற்​போது மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களுக்கு இதுகுறித்து அனுப்​பி​யுள்ள கடி
தத்​தில் அக்​டோபர் 15-ம் தேதிக்​குள் பயனாளி​கள் குறித்த சரி​பார்ப்​புப் பணி​களை முடிக்​கு​மாறு வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.
விவ​சா​யிகளின் குடும்ப நிதி தேவையை பூர்த்தி செய்​வதை நோக்​க​மாகக் கொண்டு பிஎம் கிசான் திட்​டம் மத்​திய அரசால் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. அதன்​படி, ரூ.2,000 வீதம் மூன்று தவணை​களில் ஆண்​டுக்கு ரூ.6,000 ஒவ்​வொரு விவ​சாய குடும்​பத்​துக்​கும் வழங்​கப்​படு​கிறது. இது, நேரடி​யாக விவ​சா​யிகளின் வங்​கிக் கணக்​கில் செலுத்தப்படுகிறது.