Home செய்திகள் தேசிய செய்திகள் வினா தான் கசிவிற்காக போராடிய தர்மேந்திர பிரதானுக்கு அதுவே எதிராக திரும்பியது

வினா தான் கசிவிற்காக போராடிய தர்மேந்திர பிரதானுக்கு அதுவே எதிராக திரும்பியது

டெல்லி, ஜூலை 23- வாழ்க்கை ஒரு வட்டம் சார்… எப்படி சொல்றீங்க.. 1997-ஆம் ஆண்டில், நமது நாட்டின் உயர்கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒடிசாவில் ஒரு இளம் மாணவர் தலைவராக இருந்தார். அப்போது ஒடிசா தலைமைச் செயலகத்திற்கு வெளியே நின்று, வினாத்தாள் கசிவுக்கு எதிராக அவர் உரத்த குரலில் போராடினார். அன்று காவல்துறையினர் அவரை கடுமையாகத் தாக்கினர். ஆனால் இன்று, அவர் தான் இந்தியாவின் கல்வியை வடிவமைக்கும் உயர் கல்வி அமைச்சராக உயர்ந்துள்ளார். முக்கிய கல்வி அமைச்சராக உயர்ந்துள்ளார். ஆச்சரியம் என்னவென்றால், வினாத்தாள் கசிவுப் பிரச்சனைகள் மீண்டும் வந்துவிட்டது. இப்போது மக்கள் அவருக்கு எதிராகவும் போராடுகிறார்கள்! வாழ்க்கை சில நேரங்களில் விசித்திரமானது. இன்று டெல்லி ஜந்தர் மந்திரில் கடும் குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் யாருக்கு எதிராக போராடுகிறார்கள் என்றால் தர்மேந்திர பிரதானை எதிர்த்து தான்..பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தர்மேந்திர பிரதானை பதவி நீக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்றே போராடுகிறார்கள். நீட் தேர்வு கேள்வித்தாள் கசிவு மற்றும் அதனை தொடர்ந்து நடந்த மறுதேர்வால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் கல்வி உரிமைக்காக போராடி வருகிறார்கள். இவர்கள், பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று ஆசைப்படும் தர்மேந்திர பிரதான், பெரும் தலைவராக உருவெடுத்ததும் ஒரு பேப்பர் லீக் பிரச்சனைக்காத்தான் என்பது ஆச்சரியமானது.