Home செய்திகள் தேசிய செய்திகள் டெல்லியில் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் 2வது நாளாக மூடல்

டெல்லியில் 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் 2வது நாளாக மூடல்

புதுடெல்லி: ஜூலை 23-
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (சிஜேபி) சார்பில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுடெல்லியில் உள்ள 16 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களின் செயல்பாடுகளை டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடர்ச்சியாக 2-வது நாளாக தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இன்று காலை 7:30 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை குறிப்பிட்ட 16 மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டிருந்தாலும், பயணிகளின் வசதிக்காக ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரட்டரியேட் ஆகிய நிலையங்களில் பாதைகளை மாற்றிப் பயணிக்கும் வசதி மட்டும் தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டேல் சவுக், லோக் கல்யாண் மார்க், ராமகிருஷ்ணா ஆசிரமம் மார்க், பாராகம்பா ரோடு, உச்ச நீதிமன்றம், சேவா தீர்த், ஜனபத் உள்ளிட்ட முக்கிய நிலையங்களின் வாயில்கள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.