விபத்து: கார் மோதியதில் 4 பேர் காயம்

பெங்களூரு, ஜன. 1: பெல்லந்தூர் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு சென்ற‌ கார் மின் கம்பத்தில் மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்தது.
நள்ளிரவு வரை கோரமங்களாவில் புத்தாண்டு பார்ட்டியை முடித்துக் கொண்ட 3 இளைஞர்களும், ஒரு இளம் பெண்ணும் காரில் யமலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
வழியின் நடுவே பெல்லந்தூர் ஏரி அருகே உள்ள திருப்பத்தில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். உடனடியாக பிபிஎம்பி மார்ஷல்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, காரில் இருந்தவர்களுக்கு உதவி செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். இது குறித்து பெல்லந்தூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.