விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. சாதனை படைத்த கூட்டுறவு சங்கம்

சென்னை: பிப்ரவரி 18-
கிராமங்களில் அமைதியாக நடந்த ஒரு முயற்சி பெரிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது என்றால் அது பயிர்க்கடன் திட்டம்தான்.. விவசாயிகளின் கையில் நேரடியாக நிதி வலிமை சேர்க்கும் அமைப்பு இப்போது கவனத்தை ஈர்க்கிறது. சாகுபடி காலத்தில் நம்பிக்கையாக மாறிய இந்த திட்டம் பல இடங்களில் சாதனையை படைத்து வருகிறது. அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஒரு குட் நியூஸ் வெளியாகி உள்ளது.. தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் 4,473 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் விவசாயிகளுக்கு மிக அருகாமையில் செயல்படும் இந்த சங்கங்கள், சாகுபடி காலங்களில் அவசரமாக தேவைப்படும் நிதி உதவியை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கூட்டுறவு வங்கி நகைக்கடன் பயிர் கடன், நகைக்கடன், விவசாயம் சார்ந்த பிற கடன்கள் என பல்வேறு பிரிவுகளில் சேவைகள் வழங்கப்படுகின்றன. லட்சக்கணக்கான
விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 46,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டதாக கூட்டுறவு துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் முக்கிய பங்காற்றுவது National Bank for Agriculture and Rural Development ஆகும். இந்த தேசிய வங்கி நேரடியாக விவசாயிகளுக்கு கடன் வழங்காது. கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் மாறாக, மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் மறுகடன் வழங்குகிறது. இதன் மூலம் கிராம மட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கும் எளிதாக வங்கி கடன் கிடைக்கிறது.
குறிப்பாக, உரிய காலக்கெடுவுக்குள் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லா பயிர் கடன் வழங்கப்படும் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் வட்டிச்சுமை குறைந்து, சாகுபடி தொடக்கச் செலவுகளை சமாளிக்க விவசாயிகளுக்கு உதவியாக உள்ளது. இந்த திட்டங்களின் பயனை தெளிவாக காட்டும் எடுத்துக்காட்டாக ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்கள் உள்ளன. இவ்விரு தாலுகாக்களிலும் மொத்தம் 33 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.