
பெங்களூரு: டிசம்பர் 19-
முட்டை சாப்பிடுவதால் புற்றுநோய் வரும் என்று வெளியான சில செய்திகளை தொடர்ந்து மாநில அரசு, தனியார் ஆய்வகங்கள் முட்டைகளை பரிசோதித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட பிராண்ட் முட்டைகளில் புற்றுநோயை உண்டாக்கும் “ஜெனோடாக்ஸிக்” பொருள் இருப்பதாகக் கூறும் ஒரு வீடியோ வைரலானது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
முட்டைகளில் புற்றுநோய் உண்டாக்கும் பொருட்கள் உள்ளதா இல்லையா என்பது குறித்த அறிக்கையை வழங்குமாறு அரசாங்கம் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
தனியார் ஆய்வகத்திற்கு சோதனை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது, மேலும் ஒரு வாரத்திற்குள் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அரசு ஆய்வகத்தில் அதிக தொழில்நுட்ப உபகரணங்கள் இல்லாததால், தனியார் ஆய்வகத்தில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வதந்திகளைத் தொடர்ந்து, மாநிலத்தின் 13 மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் புற்றுநோயை உண்டாக்கும் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாக்கி இருக்கிறது.
பல்வேறு பகுதிகளில் இருந்து முட்டை மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பெங்களூரு பிபிஎம்பி மண்டலங்கள், கிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், வடக்கு மண்டலம், பெங்களூரு நகர் மாவட்டம், பெங்களூரு ரூரல், தும்கூர், பாகல்கோட், மைசூர், கலபுர்கி, தட்சிண கன்னடா, பெல்காம், தாவாங்கேரே, ராய்ச்சூர் மாவட்டங்களில் இருந்து முட்டை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

















