வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியாவுக்கு நோபல் பரிசு: யார் இவர்?

ஸ்டாக்ஹோம், அக். 11- வெனிசுலா எதிர்க்​கட்​சித் தலை​வர் மரியா கொரினா மச்​சா​டாவுக்கு அமை​திக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சாதனை படைத்​தவர்​களுக்கு நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது. இதில் அமை​திக்​கான நோபல் பரிசுக்கு உரிய​வரை நார்வே நோபல் கமிட்டி தேர்வு செய்​கிறது. இதர 5 பிரிவு​களின் நோபல் பரிசுக்கு உரிய​வர்​களை ராயல் சுவிடிஷ் அகாடமி ஆப் சயின்​சஸ் தேர்வு செய்​கிறது. இந்த ஆண்​டுக்​கான நோபல் பரிசு கடந்த 6-ம் தேதி முதல் அறிவிக்​கப்​பட்டு வரு​கிறது. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம் ஆகிய​வற்​றுக்​கான நோபல் பரிசுகள் அடுத்​தடுத்து அறிவிக்​கப்​பட்​டன. இந்த வரிசை​யில் அமை​திக்​கான நோபல் பரிசு நேற்று வெளி​யிடப்​பட்​டது. இதன்​படி வெனிசுலா நாட்​டின் எதிர்க்​கட்​சித் தலை​வர் மரியா கொரினா மச்​சா​டாவுக்கு அமை​திக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. இதுகுறித்து நார்வே நோபல் கமிட்டி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: வெனிசுலா மக்​களின் ஜனநாயக உரிமை​களுக்​காக மரியா அமைதி வழி​யில் போராடி வரு​கிறார். லத்​தீன் அமெரிக்க நாடு​களில் மிகச் சிறந்த ஜனநாயக தலை​வ​ராக அவர் விளங்​கு​கிறார். வெனிசுலா​வில் செயல்​பட்ட பல்​வேறு எதிர்க்​கட்​சிகளை ஒருங்​கிணைத்து சர்​வா​தி​காரத்​துக்கு எதி​ராக அவர் போராடு​கிறார். சர்​வா​தி​கார ஆட்சி காரண​மாக வெனிசுலா​வில் இருந்து சுமார் 80 லட்​சம் மக்​கள் வெளி​யேறி உள்​ளனர். இந்த சூழலில் மக்​களுக்​காக அவர் குரல் எழுப்பி வரு​கிறார். நேர்​மை​யான முறை​யில் தேர்​தல் நடத்​தப்பட வேண்​டும். ஜனநாயக ஆட்சி அமைய வேண்​டும். வறுமையை போக்க வேண்​டும் என்ற அவரது கருத்​துகள் வெனிசுலா மக்​களிடம் பெரும் ஆதரவை பெற்​றிருக்​கிறது. மரி​யா​வின் உயிருக்கு அச்​சுறுத்​தல் இருக்​கிறது. எனினும் சர்​வா​தி​காரத்​துக்கு எதி​ராக அவர் துணிச்​சலாக போராடி வரு​கிறார். அவரை கவுரவிக்​கும் வகை​யில் அமை​திக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்​டிருக்​கிறது.இவ்​வாறு நார்வே நோபல் கமிட்​டி​யின் அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது. யார் இந்த மரி​யா? – கடந்த 1967-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி வெனிசுலா​வின் கரகஸ் நகரில் மரியா கொரினா மச்​சாடா பிறந்​தார். பொறி​யாள​ரான இவர் கடந்த 2001-ம் ஆண்​டில் சுமேட் என்ற தொண்டு அமைப்பை தொடங்​கி​னார்.இதன்​பிறகு அவர் அரசி​யலில் கால் பதித்​தார். கடந்த 2010-ம் ஆண்​டில் வெனிசுலா எம்​.பி.​யாக தேர்வு செய்​யப்​பட்​டார். நாடாளு​மன்​றத்​தில் சர்​வா​தி​காரம், ஊழலுக்கு எதி​ராக துணிச்​சலாக குரல் எழுப்​பி​னார். இதன்​காரண​மாக கடந்த 2014-ம் ஆண்​டில் அவரது எம்பி பதவி ரத்து செய்​யப்​பட்​டது. கடந்த 2024-ம் ஆண்​டில் நடை​பெற்ற வெனிசுலா அதிபர் தேர்​தலில் ஜனநாயக ஒற்​றுமை வட்​டமேஜை என்ற எதிர்க்​கட்​சிகள் கூட்​டமைப்பு சார்​பில் மரியா போட்​டி​யிட்​டார். ஆனால் அதிபர் தேர்​தலில் போட்​டி​யிட அவருக்கு தடை விதிக்​கப்​பட்​டது.