வெள்ள அபாயம் – பாகிஸ்தானை எச்சரித்த இந்தியா

புதுடெல்லி: ஆக. 26-
இமய மலை​யில் உரு​வாகும் தாவி நதி (Tawi River), ஜம்மு காஷ்மீர் மாநிலம் வழி​யாக பாய்ந்​து, பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாநிலத்​தில் நுழைகிறது. கனமழை காரண​மாக இந்த நதி​யில் தற்​போது வெள்​ளம் பெருக்​கெடுக்​கும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. இதுகுறித்து பாகிஸ்​தானுக்கு இந்​தியா வெள்ள அபாய எச்​சரிக்கை கொடுத்​துள்​ளது.
பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் உள்ள இந்​திய தூதரகம், அந்​நாட்​டுக்கு இந்த வெள்ள அபாய எச்​சரிக்​கையை கடந்த ஞாயிற்​றுக்​கிழமை வழங்கி உள்​ளது. காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தி​யதற்கு பதிலடி​யாக இந்​தியா ஆபரேஷன் சிந்​தூர் என்ற பெயரில் தாக்​குதல் நடத்​தி​யது. மேலும், சிந்து நதி நீர் பகிர்வு ஒப்​பந்​தத்தை இந்​தியா நிறுத்தி வைத்துள்ளது.
எனினும், பாகிஸ்​தான் மக்​களின் நலன் கரு​தி, நல்​லெண்​ணத்​தின் அடிப் படை​யில் தாவி நதி​யில் வெள்ள அபா​யம் ஏற்​படும் என்ற தகவலை பாகிஸ்​தானுக்கு இந்​தியா வழங்கி உள்​ளது. கடந்த ஜூன் 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 20-ம் தேதி வரையி​லான காலத்​தில் கனமழை, வெள்​ளத்​தில் பாகிஸ்​தானில் 788 பேர் உயி​ரிழந்​துள்​ளனர்​.