வேலவன், அனஹத் சிங் கால் இறுதிக்கு முன்னேற்றம்

சென்னை: ​டிசம்பர் 3-
ஹெச்சிஎல் ஸ்குவாஷ் இந்தியா டூர் 4 போட்டி சென்னையில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெற்று வருகிறது.இதில் ஆடவர் பிரிவு 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 46-வது இடத்தில் உள்ள இந்தியாவின் வேலவன் செந்தில் குமார், இலங்கையின் ரவிந்து லக்ஸ்ரீயை எதிர்த்து விளையாடினார். இதில் வேலவன் செந்தில்குமார் 11-7, 11-8, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு இந்திய வீரரான வீர் சோட்ரானி 8-11, 8-11, 11-7, 11-5, 11-6 என்ற செட் கணக்கில் பிரேசிலியின் டியாகோ கோபியை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் நுழைந்தார்.மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அனஹத் சிங் 11-7, 11-7, 11-7 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் தமரா ஹோல்ஸ்பவுரோவாவை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால் பதித்தார்.ஜோஷ்னா சின்னப்பா 11-5, 11-8, 11-4 என்ற செட் கணக்கில் நியூஸிலாந்தின் எல்லா ஜேன் லாஷையும், தன்வி கன்னா 12-10, 11-6, 11-6 என்ற செட் கணக்கில் இத்தாலியின் கிறிஸ்டினா டார்டரோனையும் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.