Home விளையாட்டு ஸ்குவாஷ் கால் இறுதியில் அபய் சிங்

ஸ்குவாஷ் கால் இறுதியில் அபய் சிங்

புதுடெல்லி, ஏப்ரல் 25- சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் பிஎஸ்ஏ கோல்டு லெவல் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 24-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அபய் சிங், உலகத் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள எகிப்தின் அலி அபு எலெய்னெனை எதிர்த்து விளையாடினார். இதில் அபய் சிங் 12-10, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.