
கொல்கத்தா: ஏப்ரல் 25 –
மேற்கு வங்கத்தின் ஹூக்ளி நதியில் படகு சவாரி செய்தார் பிரதமர் மோடி.கடந்த 19-ம் தேதி மேற்குவங்கத்தின் ஜார்கிராம் பகுதியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். தலைநகர் கொல்கத்தாவில் கங்கையின் கிளை நதியான ஹுக்ளியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று படகு சவாரி செய்தார்.படகோட்டி கவுரங்கா பிஸ்வாஸ், படகினை ஓட்டினார். அவருக்கு பிரதமர் மோடி ரூ.1,000 வழங்கினார். கரை திரும்பிய பிறகு அவரை ஆரத் தழுவி பாராட்டினார்.
இதுதொடர்பான புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மேற்குவங்க மக்களின் வாழ்க்கையில் கங்கை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த புனித நதி மேற்குவங்கத்தின் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.தலைநகர் கொல்கத்தாவில் ஹுக்ளி நதியில் சிறிது நேரம் படகு சவாரி செய்தேன். இதன்மூலம் அன்னை கங்கைக்கு மரியாதை செலுத்தினேன். படகோட்டியின் கடினமான வாழ்க்கை நடைமுறைகளை கேட்டு அறிந்தேன். மேற்குவங்கத்தின் வளர்ச்சி, மக்களின் செழிப்புக்காக பாஜக அயராது பாடுபடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியின் படகு சவாரி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.



















