ஹெச்.ராஜா உடல்நலம் குறித்து குடும்பத்தாரிடம் விசாரித்த முதல்வர்

சென்னை: பிப்ரவரி 2-
பாஜக மூத்த தலை​வரும், தேசிய செயற்​குழு உறுப்​பினரு​மான ஹெச்​.​ராஜா (68), கடந்த 30-ம் தேதி சென்​னை​யில் நடந்த தனி​யார் தொலைக்​காட்சி நிகழ்ச்சி பங்​கேற்றபோது, திடீரென மயங்கி விழுந்​தார்.
உடனடியாக அரு​கில் உள்ள தனி​யார் மருத்​துவமனை​யில் சேர்க்​கப்​பட்ட அவர், பின்​னர் மேல் சிகிச்​சைக்​காக அப்​போலோ மருத்​துவமனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.
அவருக்கு பக்​க​வாத பாதிப்பு ஏற்​பட்​டது பரிசோதனை​யில் தெரிய​வந்​தது. இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்​பட்டு வரு​கிறது. குடும்​பத்​தினர், நண்​பர்களுடன் பேசக்​கூடிய வகை​யில் அவர் நலமுடன் இருப்​ப​தாக மருத்​து​வ​மனை தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.
இந்​நிலை​யில், மருத்​து​வ​மனைக்கு நேற்று வந்த முதல்வர் ஸ்டா​லின், அங்கு சிகிச்சை பெற்று வரும் ஹெச்​.​ராஜா​வின் உடல்​நலம் குறித்து அவரது குடும்​பத்​தினரிடம் கேட்​டறிந்தார். அப்​போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் உடன் இருந்​தார். தொடர்ந்​து, அதே மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரும் குளித்​தலை திமுக எம்​எல்ஏ ஆர்​.​மாணிக்​கத்தையும் சந்​தித்து உடல்​நலம் குறித்து முதல்வர் கேட்​டறிந்​தார்​.