
சென்னை, டிச. 17- ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் இன்று (16-ம் தேதி) பிற்பகல் 2.30 மணிக்கு அபுதாபியில் தொடங்கியது. 29 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 77 வீரர்கள் இந்த ஏலத்தில் ஐபிஎல் அணிகளால் எடுக்கப்பட்டனர். கேமரூன் கிரீனை ரூ.25.20 கோடிக்கும், பதிரனாவை ரூ.18 கோடிக்கும் வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. பிரஷாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மாவை தலா ரூ.14.20 கோடிக்கு வாங்கியது சிஎஸ்கே அணி. இவர்கள் இருவரும் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்கள்.
மங்கேஷ் யாதவ் எனும் வீரரை ரூ.5.20 கோடிக்கு ஆர்சிபி வாங்கியது. இப்படி இந்த ஏலம் சர்ப்ரைஸ், சுவாரஸ்யம் நிறைந்ததாக இருந்தது. டெல்லி கேபிடல்ஸ்: நிதிஷ் ராணா,
அபிஷேக் போரல், அஜய் மண்டல், அசுதோஷ் சர்மா, அக்சர் படேல், துஷ்மந்தா சமீரா, கருண் நாயர், கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ், மாதவ் திவாரி, மிட்செல் ஸ்டார்க், சமீர் ரிஸ்வி, நடராஜன், திரிபுரானா விஜய், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் குமார் நிகம், முகேஷ் குமார். ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் – அகீப் தார், பதும் நிசாங்கா, கைல் ஜேமிசன்,
இங்கிடி, பென் டக்கெட், டேவிட் மில்லர், பிரித்வி ஷா, சஹில் பிரகாஷ். கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: அஜிங்க்ய ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா, மணீஷ் பாண்டே, ரமன்தீப் சிங், சிங்கு சிங், ரோவ்மன் பவல், சுனில் நரைன், உம்ரன் மாலிக், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி. ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் – கேமரூன் கிரீன், பதிரனா, முஸ்தாபிசூர் ரஹ்மான், தேஜஸ்வி சிங், ரச்சின் ரவீந்திரா, பின் ஆலன், டிம் செய்ஃபெர்ட், ஆகாஷ் தீப், ராகுல் திரிபாதி, தக்ஸ் கம்ரா, சர்தக் ரஞ்சன், பிரஷாந்த் சோலங்கி,
கார்த்தி தியாகி. சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, அனிகெத் வர்மா, பிரைடன் கார்ஸ், இஷான் மலிங்கா, ஹர்ஷ் துபே, ஹர்ஷால் படேல், ஹென்ரிச் கிளாசன், இஷான் கிஷன், ஜெயதேவ் உனத்கட், கமிந்து மெண்டிஸ், நிதிஷ் குமார் ரெட்டி, சமரன், ஜீஷன் அன்சாரி.




















