13 வயது சிறுமிக்கு 40 வயது ஆணுடன் திருமணம்

ஹைதராபாத்:ஆகஸ்ட் 1- தெலங்கானாவில் 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை, 40 வயது ஆண் ஒருவர் குழந்தை திருமணம் செய்துள்ளார். அந்த நபர் ஏற்கனவே திருமணம் ஆனவர். இந்த சம்பவத்துக்கு சிறுமியின் அம்மா, 40 வயது நபரின் மனைவி துணையாக இருந்துள்ளனர். அவர்கள் முன்னிலையில் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் ஆங்காங்கே அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன. போக்சோ பிரிவில் அதிகளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. குழந்தை திருமணமும் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.
, நந்திகமா பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் காவல்துறைக்கு ஒரு தகவல் கொடுத்தார். எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு, அவரின் குடும்பத்தினரே 40 வயது ஆணுடன் சட்ட விரோதமாக குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரிக்க தொடங்கினார்கள். அந்த சிறுமி தன் தாய் மற்றும் சகோதரருடன் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். அந்த வீட்டின் உரிமையாளரிடம் சிறுமியின் அம்மா, தன் மகளுக்கு ஒரு மணமகன் வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது ரங்கா ரெட்டி மாவட்டம் செவ்வெல்லா பகுதியைச் சேர்ந்த ஶ்ரீனிவாஸ் (வயது 40) என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.