Home செய்திகள் தேசிய செய்திகள் 15.6 கிலோ தங்கம் பறிமுதல்

15.6 கிலோ தங்கம் பறிமுதல்

கொல்கத்தா: ஆக. 31:
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டம் பான்பூர் எல்லைப் பகுதியில் தங்கம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, எல்லை பாதுகாப்புப் படையின் 32-வது பட்டாலியன் வீரர்கள் தீவிர ரோந்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரக் கண்காணிப்புக்குப் பிறகு, சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்த பெண்ணை பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவரிடமிருந்து 15 கிலோ 607 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ.24 கோடியே 95 லட்சத்து 56 ஆயிரம் ஆகும்.
எல்லைப் பகுதியில்
அண்மைக்காலத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய தங்கக் கடத்தல் சம்பவங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இந்த தங்கம் எல்லைப் பகுதியுக்கு எப்படி கொண்டு வரப்பட்டது, யாருக்கு விநியோகம் செய்ய திட்டமிட்டிருந்தனர் என்பதையும், இதன் பின்னணியில் உள்ள சர்வதேசக் கடத்தல் கும்பல் யார் என்பதையும் குறித்து பிடிபட்ட பெண்ணிடம் பிஎஸ்எப் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.