17 வருட சிறைக்கு பிறகு ஜாமீன்

புதுடெல்லி: செப்டம்பர் 6-
மும்​பை​யில் 1993-ல் நிகழ்ந்த தொடர் குண்​டு​வெடிப்பு வரை நிழல் உலக தாதாக்​களின் பிடி​யில் அந்​நகரம் இருந்​தது. இந்த தாதாக்​களில் முன்​னணி​யில் இருந்த தாவூத் இப்​ராஹிம், சோட்டா ராஜன், ரவி பூஜாரி உள்​ளிட்​டோருக்கு சவாலாக இருந்​தவர் அருண் காவ்​லி (76). இவர் தனது ஆதர​வாளர்​களால் ‘அப்​பா’ என்று அன்​புடன் அழைக்​கப்​பட்​டார்.
இவர் வசித்த மும்​பை, பைகுல்லா பகு​தி​யின் தக்டி சாலை இவரது கோட்​டை​யாக இருந்​தது. ஓர் எளிய மராத்தி குடும்​பத்​திலிருந்து உயர்ந்து மும்பை தாதாக்​கள் உலகில் கொடிகட்​டிப் பறந்த காவ்​லி​யின் வாழ்க்கை திரைப்​படக்கதைகள் போல் உள்​ளது.மெட்​ரிக் படிப்​புக்​குப் பிறகு சிறு வயதிலேயே காவ்லி குற்ற உலகில் நுழைந்​தார். 1980-களில், தனது நண்​பர் ராமா நாயக் கும்​பலுடன் இணைந்து பணி​யாற்​றத் தொடங்​கி​னார். அப்​போது அவருக்கு தாவூத் இப்​ராஹிம் மற்​றும் சோட்டா ராஜனை சந்​திக்​கும் வாய்ப்பு கிடைத்​தது. இவர்​கள் இரு​வரும் மும்பை நிழல் உலகில் வளர்ந்து வரும் தாதாக்​களாக இருந்​தனர்.
தாவூத்​தின் சட்​ட​விரோத ஆயுதங்​கள் மற்​றும் போதைப் பொருட்​களை பாது​காப்​பான இடங்​களுக்கு கொண்டு செல்​லும் பொறுப்பு காவ்​லிக்கு வழங்​கப்​பட்​டது.இந்த நட்பு சிறிது காலம் நீடித்​தது, ஆனால் கடந்த 1988-ல் தாதாக்​களுக்கு இடையி​லான மோதலில் காவ்​லி​யின் நெருங்​கிய நண்​பர் ராமா நாயக் கொல்​லப்​பட்​டார். இந்​தக் கொலைக்கு தாவூத் இப்​ராஹிம் காரணம் என காவ்லி சந்​தேகித்​தார். இது காவ்​லியை மிக​வும் காயப்​படுத்​தி​யது.தாவூத்தை விட்​டுப் பிரிந்த காவ்லி சொந்த கும்​பலை உரு​வாக்​கி​னார். இதனால் காவ்லி – தாவூத் இடையே மோதல் வலுத்​தது. இதில் பல துப்​பாக்​கிச் சூடு மோதல்​களில் இருதரப்​பிலும் உயி​ரிழப்பு ஏற்​பட்​டது