175 பொருட்களின் விலை அடியோடு குறையுது

டெல்லி: செப்.2- டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, மத்திய அரசு கிட்டத்தட்ட 175 பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (GST) குறைக்க திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, ஜி.எஸ்.டி-யை குறைந்தது 10 சதவீத புள்ளிகள் குறைக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது 18% உள்ள தனிநபர் பராமரிப்புப் பொருட்களான டால்கம் பவுடர், பற்பசை மற்றும் ஷாம்பூ மீதான ஜி.எஸ்.டி 5% ஆகக் குறைக்கப்படும். இது இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் மற்றும் கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்களுக்கு பெரிய ஊக்கமாக அமையும்.
GST ஜீரோ வரி நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களான UHT பால், முன்பே பேக்கேஜ் செய்யப்பட்ட பன்னீர், பிட்சா ரொட்டி, காக்கரா, சப்பாத்தி மற்றும் ரொட்டி போன்றவற்றுக்கு இனி GST இல்லை. ஜிஎஸ்டி கவுன்சில் தனது பூஜ்ஜிய வரி வரம்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் 5% மற்றும் 18% வரிவிதிப்பில் இருந்த அத்தியாவசியப் பொருட்களுக்கு இனி வரி விலக்கு அளிக்கப்படும். இதேபோல், முன்பு 18% வரிவிதிக்கப்பட்ட பராட்டா மற்றும் பரோட்டா ஆகியவையும் பூஜ்ஜிய வரி வரம்பின் கீழ் கொண்டுவரப்பட உள்ளன. வரி விகிதங்களை சீரமைக்கும் அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கல்வி சார்ந்த பொருட்களும் இந்த வரி குறைப்பினால் பெரிதும் பயனடையவுள்ளன.