18% வாக்குகள் இருந்தும் பலன் இல்லை

புதுடெல்லி: நவ. 4 –
பிஹாரில் மொத்​தம் உள்ள 243 தொகு​தி​களில் சுமார் 18% முஸ்​லிம்​கள் உள்​ளனர். ஒவ்​வொரு தேர்​தலிலும் லாலு​வின் ராஷ்டி
ரிய ஜனதா தளம் கட்சிக்கு (ஆர்​ஜேடி) முஸ்​லிம் வாக்​கு​களின் பலன் கிடைக்​கிறது.
நவம்​பர் 6-ல் நடை​பெறவுள்ள தேர்​தலில் 121 தொகு​தி​களில் 18 முஸ்​லிம்​களுக்கு ஆர்​ஜேடி வாய்ப்​பளித்​துள்​ளது. அசாதுதீன் ஒவைசி​யின் ஏஐஎம்​ஐஎம் கட்​சி​யின் 2 எம்​எல்​ஏக்​.களும் இடம் பெற்​றுள்​ளனர்.
ஆர்​ஜேடி​யுடன் இணைந்து 61 தொகு​தி​யில் போட்​டி​யிடும் காங்​கிரஸில் 10 முஸ்​லிம் வேட்​பாளர்​கள் உள்​ளனர். இந்த மெகா கூட்​ட​ணி​யின் இதரக் கட்​சிகளில் சிபிஐஎம்​எல் மட்​டுமே 2 முஸ்​லிம்​களை நிறுத்தி உள்​ளது. 2020 தேர்​தலிலும் மெகா கூட்​ட​ணி​யில் இதே அளவில் முஸ்​லிம் வேட்​பாளர்​கள் இடம்​பெற்​றனர். பிரசாந் கிஷோரும் 21 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளித்​துள்​ளார்.
ஆளும் கூட்​ட​ணியில் நிதிஷ்கு​மாரின் ஐக்​கிய ஜனதா தளம் 101 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. இதில் 4 முஸ்​லிம் வேட்​பாளர்​கள் உள்​ளனர். அதன் கூட்​ட​ணி​யான எல்​ஜேபி​யில் ஒரே ஒரு முஸ்​லிம் வேட்பாளர் உள்​ளார். முக்​கியக் கூட்​ட​ணி​யான பாஜக 101 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டும் அதில் ஒரு முஸ்​லிம் வேட்​பாளர் கூட இடம்​பெற​வில்​லை.
பிஹாரின் முன்​னாள் துணை முதல்​வர் தேஜஸ்வி யாதவ், மெகா கூட்​ட​ணி​யின் முதல்​வர் வேட்​பாள​ராகி உள்​ளார். இவருக்கு 2 துணை முதல்​வர்​கள் இருப்​பார்​கள் என அறிவிக்​கப்​பட்​டது. இக்​கூட்​ட​ணி​யின் சிறியக் கட்​சி​யான விகாஷீல் இன்​சான் கட்சி (விஐபி) நிறு​வனர் முகேஷ் சாஹ்னி, துணை முதல்​வர் வேட்​பாள​ராக அறிவிக்​கப்​பட்​டுள்​ளார். மற்​றொரு துணை முதல்​வர் பதவிக்கு முஸ்​லிம் வேட்​பாளரின் பெயரை அறிவிக்​காத​தால் அதிருப்​தியை உரு​வாக்கி உள்​ளது. 18% வாக்​காளர்​கள் இருந்​தும் அதன் பலன் முஸ்​லிம்​களுக்கு கிடைக்​க​வில்லை என்ற கருத்து உள்​ளது.