
கவுகாத்தி, நவ. 25- தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறது. ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் இந்திய அணி தோல்வி அடையப் போகிறது என்று முடிவு செய்துவிட்டனர். எனினும், இன்னும் போட்டி முடியாததால், 314 ரன்கள் பின்தங்கி இருக்கும் இந்திய அணி இந்த போட்டியில் எப்படி வெற்றி பெற முடியும் என்பதையும், இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. இதில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரைச் சமன் செய்ய முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 489 ரன்கள் சேர்த்தது. இந்தியா வெறும் 201 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 288 ரன்கள் பின்தங்கி இருந்தது. அப்போது தென்னாப்பிரிக்க அணி ‘ஃபாலோ-ஆன்’ கொடுத்திருக்கலாம். ஆனால், தங்களின் பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு தேவை என்பதோடு, நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வேண்டி வந்தால் அது மிகவும் சிக்கலாகிவிடும் என்ற உஷாரான முடிவால் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். மூன்றாவது நாள் ஆட்ட நேரம் முடிவில் தென்னாப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது தென் ஆப்பிரிக்க அணி மொத்தமாக 314 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில், நான்காவது நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி மேலும் 200 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு 500-க்கும் அதிகமான ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால் இந்திய அணி ஐந்தாம் நாள் ஆட்டத்தில் நிச்சயம் தாக்குப் பிடிக்க முடியாது.


















