2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர், ஆக. 7- ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள திக்வார் துணைப் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து,
பாதுகாப்புப் படையினா் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படை வீரா்கள் பதிலடி தாக்குதல் நடத்தினர். இறுதியில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.கொல்லப்பட்டவா்கள் யார்? எந்த பயங்கரவாத அமைப்பைச் சோந்தவா்கள் என்பது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலை நடத்த தீவிரவாத குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த இரண்டாவது ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது .
என்பது குறிப்பிடத்தக்கது.