2 போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைப்பு

விசாகப்பட்டினம்: ஆக. 26-
ஐஎன்​எஸ் உதயகிரி, ஐஎன்​எஸ் ஹிம்​கிரி என்ற இரு போர்க்​கப்​பல்​கள் இன்று கடற்​படை​யில் இணைக்​கப்பட உள்​ளன. இந்​திய கடற்​படை​யில் 135-க்​ கும் மேற்​பட்ட போர்க்​கப்​பல்​கள் உள்​ளன. இதில் ஐஎன்​எஸ் விக்​ர​மா​தித்​யா, ஐஎன்​எஸ் விக்​ராந்த் ஆகியவை விமானந்​தாங்கி போர்க்​கப்​பல்​கள் ஆகும். 20 நீர்​மூழ்​கி​களும் கடற்​படை​யில் உள்​ளன. வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் இந்​திய போர்க்​கப்​பல்​களின் எண்​ணிக்​கையை 160 ஆகவும், 2035-ம்ஆண்​டில் 200 ஆகவும் அதி​கரிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்டு உள்​ளது.
இதற்​காக உள்​நாட்​டிலேயே போர்க்​கப்​பல்​கள் தயாரிக்​கப்​பட்டு வரு​கின்​றன. அந்த வகை​யில் ‘பு​ராஜக்ட் 17ஏ’ என்ற திட்​டத்​தின் அடிப்​படை​யில் சிறிய ரகத்தை சேர்ந்த 7 போர்க்​கப்​பல்​கள் தயாரிக்​கப்​பட்டு உள்​ளன. இந்த போர்க்​கப்​பல்​களுக்கு நீல​கிரி, ஹிம்​கிரி, தாராகிரி, உதயகிரி, துனாகிரி, விருதகிரி, மகேந்​திரகிரி என்று இந்​திய மலைகளின் பெயர்​கள் சூட்​டப்​பட்​டுள்​ளன. ஒவ்​வொரு கப்​பலும் ரூ.4,000 கோடி மதிப்பு கொண்​டவை ஆகும்.
‘பு​ராஜக்ட் 17ஏ’ திட்​டத்​தின்​படி ஐஎன்​எஸ் நீல​கிரி போர்க்​கப்​பல் கடந்த ஜனவரி​யில் இந்​திய கடற்​படை​யில் இணைக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து விசாகப்​பட்​டினத்​தில் இன்று நடை​பெறும் விழா​வில் ஐஎன்​எஸ் உதயகிரி, ஐஎன்​எஸ் ஹிம்​கிரி ஆகிய போர்க்​கப்​பல்​கள் கடற்​படை​யில் இணைக்​கப்பட உள்​ளன.
இரு போர்க்​கப்​பல்​களும் 488 அடி நீளம், 58 அடி அகலம் கொண்​ட​தாகும். இவற்​றின் எடை 6,670 டன் ஆகும். இந்த போர்க்​கப்​பல்​களில் பிரம்​மோஸ் ஏவு​கணை​கள், பரக் ஏவு​கணை​கள், 76 எம்​எம் துப்​பாக்​கி​கள், நீர்​மூழ்​கி​களை அழிக்​கும் அதிநவீன ஏவு​கணை​கள் பொருத்​தப்​பட்டு உள்​ளன. இந்த ஆயுதங்​கள் மூலம் எதிரி​களின் போர்க்​கப்​பல்​கள், நீர்​மூழ்​கி​கள், எதிரி​களின் கடற்​படைத் தளங்​களை மிகத் துல்​லிய​மாக தாக்கி அழிக்க முடி​யும்.
இதுகுறித்து இந்​திய கடற்​படை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: இந்​திய பெருங்​கடலில் சீனா​வின் அச்​சுறுத்​தல் அதி​கரித்து வரு​கிறது. இந்த சூழலில் சீனா​வுக்கு இணை​யாக இந்​திய கடற்​படை​யின் பலத்தை அதி​கரிக்க மத்​திய அரசு அதிதீ​விர நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது.
இதன் ஒரு பகு​தி​யாக உள்​நாட்​டிலேயே போர்க்​கப்​பல்​கள், நீர்​மூழ்​கி​கள் கட்​டப்​பட்டு கடற்​படை​யில் அடுத்​தடுத்து இணைக்​கப்​பட்டு வரு​கின்​றன. ‘பு​ராஜக்ட் 17ஏ’ திட்​டத்​தில் மொத்​தம் 7 போர்க்​கப்​பல்​கள் கட்​டப்​பட்டு உள்​ளன. இதில் ஐஎன்​எஸ் நீல​கிரி ஏற்​கெனவே கடற்​படை​யில் இணைக்​கப்​பட்டு விட்​டது. விசாகப்​பட்​டினத்​தில் ஆகஸ்ட் 26-ம் தேதி நடை​பெறும் விழா​வில் மேலும் 2 போர்க்​கப்​பல்​கள் இணைக்​கப்பட உள்​ளன. மீத​முள்ள 4 போர்க்​கப்​பல்​கள் அடுத்த ஆண்​டுக்​குள் கடற்​படை​யில் இணைக்​கப்​படும். இவ்​வாறு கடற்​படை வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.