
வாஷிங்டன், ஆகஸ்ட் 4 – அமெரிக்காவின் 25 மாகாணங்கள் டிரம்ப் அரசுக்கு எதிராக இணைந்து வழக்கைத் தொடுத்துள்ளன. இதில் சுங்க வரி உயர்வு, வர்த்தகச் சட்டம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை முக்கியக் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற நாளில் இருந்து பல்வேறு உலக நாடுகள் மீது அதிக வரிகளை விதித்து வருகிறார். பொருட்கள் உற்பத்தியில் கட்டாய உழைப்பு பயன்படுத்தப்படுவது தொடர்பான விவகாரத்தில், கடந்த மாதம் இந்தியா உட்பட 59 நாடுகள் மீது வரிகளை விதித்தார். இது தொடர்பாக அமெரிக்காவின் 25 மாகாணங்கள் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் இணைந்து வழக்கு தொடுத்துள்ளன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் வகையில், வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301-ஐ டிரம்ப் அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. இந்த சுங்க வரி நடவடிக்கையை உடனடியாகத் தடுத்து ரத்து செய்ய வேண்டும் என்பதுடன், வசூலிக்கப்பட்ட வரியைத் திரும்ப வழங்க வேண்டும் என வழக்கு தொடர்ந்த மாகாணங்கள் தெரிவித்துள்ளன.














