
சென்னை: ஆக. 4:
பெண்கள் தொடர்பாக இரட்டை அர்த்தத்தில் அவதுாறாக பேசியதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை போலீசார் கைது செய்யப்பட்டார். அவர் மீது 9 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை தடுக்கத் தவறிய தமிழக வெற்றிக் கழக அரசை கண்டித்து, தி.மு.க., சார்பில் தஞ்சாவூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. காவிரி நீருக்காக நடந்த போராட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, எந்தவித கவலையும் இன்றி, கேட்கவே கூசும் அளவிற்கு கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன், கீர்த்தனா, ரமேஷ் உள்ளிட்ட பலரும் உதயநிதி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
பெண்கள் தொடர்பாக இரட்டை அர்த்தத்தில் அவதுாறாக பேசியதாக எதிர்கட்சி தலைவர் உதயநிதியை போலீசார் கைது செய்யப்பட்டார். உதயநிதியின் நீலாங்கரை வீட்டிற்கு வந்த போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். உதயநிதி வீட்டிற்கு முன்பு முன்னாள் அமைச்சர்கள் உட்பட திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆபாசமாக, இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் பேசிய உதயநிதி மீது தஞ்சை போலீசார் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
196 bns பகைமையை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்
192 bns கலவரத்தை தூண்டுதல்
352 bns பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் ஒருவரை வேண்டுமென்று அவமதித்தல்
79 bns பெண்ணின் கண்ணியத்திற்கு அல்லது மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல்
296(b) bns பொது இடத்தில் அருவருப்பாக பேசுதல்
61 bns இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து சட்டவிரோத செயலை செய்ய திட்டமிடுதல்
351 bns ஒருவருக்கு மிரட்டல் விடுவது
தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம் பிரிவு 4 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67
முதல்வர் விஜய் மற்றும் திரிஷா பற்றி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் உதயநிதியை கைது செய்ய நீலாங்கரை வீட்டின் முன் 100க்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
காவிரி நீர் பிரச்சனை, விவசாய பயிர் கடன் தள்ளுபடி, டெல்டா விவசாயிகளுக்கு சிறப்பு நிவாரண தொகுப்பு வழங்க வலியுறுத்தி நேற்று திமுக இளைஞரணி சார்பில் உதயநிதி தலைமையில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் பொது உதயநிதி ஸ்டாலின், விஜய் மற்றும் த்ரிஷாவை பற்றி அவதூறாக பேசியதாக குற்றசாட்டு எழுந்தது. இதனால் உதயநிதியை கண்டித்து இன்று 4ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தவெக-வினர் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
பெண்களை இழிவாக பேசியதாக கூறி உதயநிதி மீது தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக-வினர் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் இன்று 4ம் தேதி உதயநிதியை கைது செய்ய அவரின் நீலாங்கரை வீட்டின் முன் 100க்கும் அதிகமான போலீஸ் குவிக்கப்பட்டனர்.
உதயநிதியை கைது செய்த போலீஸ் அவரின் வீட்டிக்கு சென்று நிலையில் முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியம் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் உதயநிதியை கைது செய்து போலீஸ் வாகனத்தில் தஞ்சைக்கு அழைத்து செல்கின்றனர்.
உதயநிதி கைதை கண்டித்து போலீசாரிடம் திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசாரின் தடுப்பை மீறியும் நீலாங்கரை வீட்டுக்கு படையெடுத்தனர் திமுகவினர்.
தற்போது உதயநிதியின் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













