Home மாவட்டங்கள் பெங்களூர் ஆகஸ்ட் 3-ல் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்திக்கிறார் முதல்வர் விஜய்

ஆகஸ்ட் 3-ல் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்திக்கிறார் முதல்வர் விஜய்

பெங்களூரு, ஜூலை 25- உச்​ச நீ​தி​மன்ற தீர்ப்​பின்​படி தமிழகத்​துக்கு கிடைக்க வேண்​டிய காவிரி நதி நீரை திறப்​பது மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்​பாக விவா​திப்​ப​தற்​காக கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மாரை தமிழக முதல்​வர் விஜய் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி சந்​திக்​கிறார். இந்த தகவலை தமிழக வேளாண் துறை அமைச்​சர் வினோத் உறுதிப்படுத்​தி​யுள்​ளார்.
காவிரி நதி நீர் பங்​கீட்டு வழக்கை விசா​ரித்த உச்​சநீ​தி​மன்​றம், ‘ஆண்​டு​தோறும் கர்​நாட​கா, தமிழகத்​துக்கு 177.25 டிஎம்சி நீரை மாதந்​தோறும் பிரித்து வழங்க வேண்​டும்’ என தனது இறுதி தீர்ப்​பில் உத்​தர​விட்​டது. ஆனால் கர்​நாட​கா​வில் நிகழாண்​டில் தென்​மேற்கு பரு​வ​மழை வழக்​கத்​தை​விட குறை​வாக பெய்​தது. இதனால் காவிரி​யின் குறுக்​கே​யுள்ள கிருஷ்ண​ராஜ​சாகர், கபினி, ஹாரங்​கி, ஹேமாவதி ஆகிய 4 அணை​களி​லும் 53 சதவீதம் அளவுக்கே நீர் இருப்​பில் உள்​ளது.
இதன் காரணங்​களை சுட்​டிக்​காட்டி கர்​நாடக அரசு, க‌டந்த புதன்​கிழமை டெல்​லி​யில் நடந்த காவிரி மேலாண்மை ஆணை​யக் கூட்​டத்​தில் தமிழகத்​துக்கு நீரை திறந்​து​விட மறுத்​தது. இதனை ஏற்ற காவிரி மேலாண்மை ஆணை​யம், நீர் திறப்​பது தொடர்​பாக கர்​நாடகா​வுக்கு எந்த உத்​தர​வை​யும் பிறப்​பிக்​க​வில்​லை. இதற்கு தமிழகத்​தில் உள்ள விவ​சாய அமைப்​பினரும் எதிர்க்​கட்​சி​யினரும் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர். கடந்த ஜூலை 22-ம் தேதி நில​வரப்​படி, கர்​நாடகா தமிழகத்​துக்கு 3.5 டிஎம்சி நீரை மட்​டுமே திறந்​து​விட்​டுள்​ளது.
தென்​மேற்​குப் பரு​வ​மழை பெய்​யாததைக் கணக்​கில் கொண்​டாலும், தமிழகத்​திற்கு மேலும் 3 டிஎம்சி நீரை திறந்​து​விட்​டிருக்க வேண்​டும் என நீர்ப்​பாசன கழக அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.
பேச்​சு​வார்த்​தைக்கு அழைப்பு: இந்​நிலை​யில் தமிழக முதல்​வர் விஜய் காவிரி நதி நீர் பங்​கீடு தொடர்​பாக கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மாருடன் விவா​திக்க முடி​வெடுத்​த​தாக கூறப்​படு​கிறது. அதன்​படி, கர்​நாடக அரசுக்கு அனுப்​பப்​பட்ட கடிதத்​தில், வரு​கிற ஜூலை 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதிக்​குள் முதல்​வர் டி.கே.சிவகு​மாரை சந்​திக்க ஏற்​பாடு செய்​யு​மாறு தமிழக அரசு கர்​நாடக அரசுக்கு கடிதம் எழு​தி​யுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.