Home செய்திகள் தேசிய செய்திகள் 4 மணி நேரத்தில் 2.15 கோடி பேர் வாக்களித்தனர்

4 மணி நேரத்தில் 2.15 கோடி பேர் வாக்களித்தனர்

சென்னை: ஏப்ரல் 23-
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 9 மணி நேர நிலவரப்படி 17.69 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 11 மணி நேர நிலவரப்படி 37.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
அதாவது மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், காலை 7 மணி முதல் 11 மணி வரையிலான 4 மணி நேரத்தில் 2.15 கோடி பேர் வாக்களித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே நேரத்தில் (2021 சட்டசபை தேர்தல்) 26.29 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.
அரசியல் தலைவர்களும், வாக்காளர்களும் காலையிலேயே தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகிறார்கள். வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் போட்டியிட மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல்
இன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் ஆளாக நடிகர் அஜித் குமார் தனது வாக்கினை செலுத்தினார். அவர் சுமார் 6.50 மணியளவில் தனது வாக்கினை செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதேபோல் முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நடிகர் சுந்தர் சி, குஷ்பு, அமைச்சர் கேன் என் நேரு உள்ளிட்டோர் காலையிலேயே தங்களது வாக்கினை செலுத்தினர். தொடர்ந்து விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 11 மணி நேர நிலவரம் மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளர்கள் வாக்கை செலுத்தி வருகிறார்கள். காலை 9 மணி நேர நிலவரப்படி 17.69 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 11 மணி நேர நிலவரம் வெளியாகி உள்ளது. இதன்படி 37.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதாவது மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், காலை 7 மணி முதல் 11 மணி வரையிலான 4 மணி நேரத்தில் 2.15 கோடி பேர் வாக்களித்துள்ளனர். அதாவது 2 கோடியே 15 லட்சத்து 38 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே நேரத்தில் 26.29 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 42.45 % வாக்குகள் பதிவாகியுள்ளது. நாமக்கல்லில் 41.41% வாக்குகளும், ஈரோட்டில் 41 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 32.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை 9 மணி நேர நிலவரம்: காலை 9 மணி நேர நிலவரப்படி 17.69 சதவீத வாக்குகள் பதிவாகியது. காலை 7 மணி முதல் 9 மணி மணி வரை இரண்டு மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 20.38 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், காலை 7 மணி முதல் 9 மணி வரை 2 மணி நேரத்திற்குள் 1 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.
மாதிரி வாக்குப்பதிவு தமிழகத்தில் 17-வது சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பினை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார். அதன்பிறகு அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல், பிரசாரம், வாக்கு சேகரிப்பு என மும்முரமாக அரசியல் பணிகளை செய்து வந்தனர். நேற்று முன் தினத்தோடு பிரசாரம் முடிந்தது.வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்திருந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. அதாவது காலை 6.00 மணியளவில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் மூன்று அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் குறிப்பிட்ட சின்னத்தில் எதிரே உள்ள பட்டனை அழுத்தி அதே சின்னத்திற்கு வாக்கு விழுகிறதா என்று சோதித்து பார்த்தனர். இப்படி 50 ஓட்டுகள் சோதனை செய்து பார்க்கப்பட்டது. பின்னர் அவை எண்ணி பார்க்கப்பட்டு வாக்குகள் சரியான கணக்கில் வருகிறதா என சோதித்து பார்க்கப்பட்டது. இப்படி ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் மாதிரி வாக்குப்பதிவானது நடந்து முடிந்துள்ளது. பின்னர் மாதிரி வாக்குகள் அனைத்தும் அழிக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த வாக்குகளும் இல்லை என்பதை முகவர்கள் முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.