4 முறை அழைத்தும் பேச மறுத்த மோடி: ட்ரம்ப்‌ பதட்டம்

புதுடெல்லி:ஆகஸ்ட் 29- வர்த்தக வரி தொடர்​பாக பேச அமெரிக்க அதிபர் 4 முறை தொலைபேசி​யில் அழைத்​தும் பிரதமர் மோடி பேச மறுத்​த​தாக ஜெர்​மனி, ஜப்​பான் பத்​திரி​கைகள் செய்தி வெளி​யிட்​டுஉள்​ளன.
உலக நாடு​களுக்கு அதிக வரி விதித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்​தி​யா​வுக்கு 25 சதவீத வரியை விதித்​தார். அத்​துடன், உக்​ரைன் மீது தாக்​குதல் நடத்தி வரும் ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால், கூடு​தலாக 25 சதவீத வரியை ட்ரம்ப் அறி​வித்​தார். அதன்​படி, இந்​தி​யா​வில் இருந்து அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு மொத்​த​மாக 50 சதவீத வரி விதிக்​கப்​பட்​டது. இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்​துள்​ளது.
ஆனால், வர்த்தக வரி விதிப்பு தொடர்​பாக அமெரிக்​கா​வின் நிர்​பந்​தத்​துக்கு அடிபணிய மாட்​டோம். எவ்​வளவு நெருக்​கடிகள் வந்​தா​லும் இந்​திய விவ​சா​யிகள், சிறு வணி​கர்​களை பாதிக்​க​விட மாட்​டேன் என்று பிரதமர் மோடி திட்​ட​வட்​ட​மாக கூறி விட்​டார். அமெரிக்​கா​வின் வரி விதிப்​பால் இந்​திய ஏற்​றும​தி​யாளர்​களுக்கு பாதிப்பு ஏற்​படும். அதை சரி​கட்ட பல்​வேறு திட்​டங்​களை மத்​திய அரசு எடுத்து வரு​கிறது.
இந்​நிலை​யில் வரி தொடர்​பாக பிரதமர் மோடி​யிடம் பேச்​சு​வார்த்தை நடத்த கடந்த சில வாரங்​களில் அதிபர் ட்ரம்ப் 4 முறை தொலைபேசி​யில் அழைத்​த​தாக​வும் பிரதமர் மோடி பேச மறுத்​து​விட்​ட​தாக​வும் ஜெர்​மனி​யின் பிராங்க்​பர்ட் நகரில் இருந்து இருந்து வெளிவரும் பிரபல ‘அல்​லெஜிமெய்ன் ஜெய்​டங்’ என்ற பத்​திரிகை செய்தி வெளி​யிட்​டுள்​ளது. இதே​போல், ட்ரம்​பிடம் பேச மோடி மறுத்​து​விட்​ட​தாக ஜப்​பானில் இருந்து வெளிவரும் ‘நிக்கீ ஏசி​யா’ பத்​திரி​கை​யும் செய்தி வெளி​யிட்​டுள்​ளது.இதற்​கிடை​யில், இந்த தகவலை உறு​திப்​படுத்த அமெரிக்​கா​வின் வெள்ளை மாளிகை அதி​காரி​கள் மறுத்​து​விட்​டனர். அதே​நேரத்​தில் பத்​திரி​கை​களில் வெளிவந்​துள்ள செய்​தி​களை மறுக்​க​வும் இல்​லை. இதுகுறித்து இந்​தி​யா​வின் முக்​கிய தூதரக அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, “முக்​கிய விவ​காரங்​களில் தொலைபேசி​யில் பேசுவது பிரதமர் மோடி​யின் பாணி இல்​லை” என்​றார். மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறும்​போது, “ட்​ரம்​பிடம் பேசி​னால், ஊகங்​களின் அடிப்​படை​யில் தகவல்​கள் திரித்து வெளி​யிடப்​படு​கின்​றன. அதை தவிர்க்க ட்ரம்​பிடம் பிரதமர் மோடி பேசுவதை தவிர்த்​திருக்​கலாம். ஏனெனில், இந்​தியா – பாகிஸ்​தான் போரின் போது ட்ரம்ப் கூறிய கருத்​துகளை மனதில் வைத்து அவரது தொலைபேசி அழைப்பை தவிர்த்​திருக்​கலாம்” என்​றனர்.ஆபரேஷன் சிந்​தூரின் போது, இந்​திய – பாகிஸ்​தான் இடையே அணுஆ​யுத போராக மாறு​வதாக இருந்​தது. அதை நான்​தான் தடுத்​தேன் என்று ட்ரம்ப் கூறி வரு​கிறார். அத்​துடன், சர்​வ​தேச அளவில் 7 போர்​களை நிறுத்தி இருக்​கிறேன் என்​றும் ட்ரம்ப் கடந்த சில நாட்​களுக்கு முன்​னர் கூறி​னார். இந்​நிலை​யில், இந்​தியா – அமெரிக்கா இடையே வர்த்தக வரி தொடர்​பாக மோதல் ஏற்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், பிரதமர் மோடி பேச மறுத்​துள்​ள​தால், அதிபர் ட்ரம்ப் கடும் பதற்​ற​மாகி இருப்​ப​தாக கூறப்​படு​கிறது.