6 வனசரகத்தில் உள்ள காப்பு காடுகளில் கணக்கெடுப்பு

செங்கல்பட்டு: பிப்ரவரி 16-
செங்கல்பட்டு மாவட்​டத்​தில் உள்ள 6 வன சரகத்​தில் உள்ள காப்பு காடு​களில் நில​வாழ் பறவை​கள் கணக்​கெடுப்பு பணி​கள் நடை​பெற்​றது. இதில், 50-க்​கும் மேற்​பட்ட பலவகை பறவை​கள் சுமார் 600 கண்​டறியப்​பட்டு ஆவணப் படுத்​தப்​பட்​டன.
செங்கல்பட்டு மாவட்ட வனக்​கோட்​டத்​தில் உள்ள 6 வனச்​சரகங்​களில் உள்ள காப்பு காடு​களில் நில​வாழ் பறவை​கள் அதி​கம் நடமாடும், 24 பகு​தி​கள் தேர்வு செய்​யப்​பட்டு அப்​பகு​தி​களில் நடப்பு ஆண்​டிற்​கான நில​வாழ் பறவை​கள் கணக்​கெடுப்பு பணி​கள் நேற்று நடை​பெற்​றது.
இதில், வனத்​துறை அலு​வலர்​கள், பணி​யாளர்​கள், அரசு சாரா தொண்டு நிறுவன பிர​தி​நி​தி​கள், தன்​னார்​வலர்​கள், உயி​ரிய​லா​ளர்​கள், பள்​ளி, கல்​லூரி மாணவர்​கள் என 144 பேர் பங்​கேற்​றனர். பைனாகுலர் மற்​றும் அதி நவீன கேம​ராக்​கள் மூலம் பறவை​கள் கணக்​கெடுக்​கப்​பட்​டது.இந்தக் கணக்​கெடுப்​பில், ஏசி​யன் கிரீன் பி ஈட்​டர், இன்​டியன் ராபின், இன்​டியன் பாரடைஸ் பிளைஈட்​டர், இன்​டியன் நைட் ஜார் உள்​ளிட்ட 50-க்​கும் மேற்​பட்ட பலவகை பறவை​கள் சுமார் 600 கண்​டறியப்​பட்டு ஆவணப் படுத்​தப்​பட்​டன.
இந்த பறவை​கள் கணக்​கெடுப்பு குறித்த விபரங்​கள் தொகுக்​கப்​பட்​டு, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்​கப்​படும். மாநிலம் முழு​வதும் நடந்த இந்த நில​வாழ் பறவை​கள் கணக்​கெடுப்பு பணி குறித்த விபரங்​கள் மொத்​த​மாக தொகுக்​கப்​பட்​டு,அரசால் விபரங்​கள் விரை​வில் வெளி​யிடப்​படும்.
வனத்துறை பணியாளர் விளக்கம்: சுற்​றுச்​சூழல் சமநிலையை பேணுதல், பசுமை பரப்பை அதி​கரித்​தல் உள்​ளிட்ட பணி​களுக்கு பறவை​கள் எவ்​வளவு முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தவை என்​பது குறித்​து, நேற்​றைய கணக்​கெடுப்பு பணி​யில் ஈடு​பட்ட தன்​னார்​வலர்​களுக்கு வனத்​துறை பணி​யாளர்​கள் மூலம் விளக்​கம் அளிக்​கப்​பட்​டது.
கடந்த ஆண்டு டிச. 27, 28ம் தேதி​களில், நீர் நிலை பறவை​கள் கணக்​கெடுப்பு நடை​பெற்​றது. இரண்டு விவரங்​களும் விரை​வில் வெளி​யிடப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.