
புதுடெல்லி: ஏப்ரல் 25 –
மேற்கு வங்க தேர்தல் பணியில் ஈடுபட்ட 65 அலுவலர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
இதை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
ரிட் மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுக அறிவுறுத்தினர். தற்போதைய தேர்தலில் அவர்கள் வாக்களிக்க முடியாது, இருப்பினும் எதிர்காலத்தில் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பது உறுதி செய்யப்படும் என்று உத்தரவிட்டனர்.



















