Home செய்திகள் தேசிய செய்திகள் 8,000 ஊழியர்கள் பணிநீக்கம்: பேரதிர்ச்சி கொடுத்த மெட்டா நிறுவனம்

8,000 ஊழியர்கள் பணிநீக்கம்: பேரதிர்ச்சி கொடுத்த மெட்டா நிறுவனம்

புதுடெல்லி, மே 21- மெட்டா ஊழியர்​களுக்கு நேற்​றைய தினம் ‘இன்று அனை​வரும் வீட்​டில் இருந்தே பணிபுரி​யுங்​கள்’ என்ற ஒரு சாதாரண உத்​தர​வுடன் தொடங்​கியது. அமெரிக்​கா, பிரிட்​டன் உள்​ளிட்ட பல்​வேறு பிராந்​தி​யங்​களில் உள்ள ஊழியர்​கள் அலுவலகத்​திற்கு வர வேண்​டாம் என்று மெட்டா நிறுவனம் அறிவித்​தது. இதனால் அவற்​றின் வளாகங்​களில் மக்​கள்​கூட்​டம் இல்​லை; அலு​வலக அறை​களில் அரட்​டைகள் இல்​லை; வளாகத்தின் தாழ்​வாரங்​களில் ஊழியர்​களின் பரபரப்​பான நடமாட்​ட​மும் இல்​லை. அதன் தொடர்ச்​சி​யாக, ஊழியர்​களின் மின்​னஞ்​சல் பெட்டிகளுக்கு அடுத்​தடுத்து செய்​தி​கள் வரத் தொடங்​கின. மெட்டா பிளாட்​பார்ம்ஸ் நிறு​வனம், தனது ஒட்​டுமொத்​தப் பணியாளர்​களில் சுமார் 10 சதவீதம் ஊழியர்களை (8,000) பணிநீக்​கம் செய்​யும் நடவடிக்​கை​யைத் தொடங்​கி​யுள்​ளது. இதற்கான முதல் அறி​விப்​பு, சிங்​கப்​பூரில் உள்ள அதன் முக்​கிய மையத்​திலிருந்து வெளி​யானது. சிங்​கப்​பூர் உள்​ளூர் நேரப்​படி அதி​காலை 4 மணிக்கு (இந்​திய நேரப்​படி நள்​ளிரவு 1:30 மணி) பணிநீக்​கம் செய்​யப்​பட்ட ஊழியர்களுக்கு மின்​னஞ்​சல்​கள் அனுப்​பப்​பட்​ட​தாக ‘புளூம்​பெர்க்’ செய்தி நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. உலகளா​விய நேர மண்டலங்களுக்கு ஏற்ப, அடுத்​தடுத்த கட்​டங்​களாக இந்த பணிநீக்க அறி​விப்​பு​கள் ஊழியர்​களுக்கு அனுப்​பப்​பட்டு வருகின்றன. முதலில் வீட்​டில் இருந்தே பணி செய்ய உத்​தர​விட்​டு, அதைத் தொடர்ந்து பணிநீக்க நடவடிக்​கையை மேற்​கொண்ட மெட்​டா​வின் இந்த உத்தி ஐடி உலகில் பெரும் விவாதத்​தைக் கிளப்பி​யுள்​ளது. இதன் பின்​னணி​யில் செயற்கை நுண்​ணறிவு மறுசீரமைப்பு நடவடிக்​கைகள் இருப்​ப​தாக கூறப்​படு​கிறது. இந்த பணிநீக்க நடவடிக்​கைக்கு முன்பு மெட்டா நிறு​வனத்​தில் சுமார் 78,000 ஊழியர்​கள் பணி​யாற்றி வந்​தனர். இந்த நிலை​யில்​தான் தற்போது ஆயிரக்​கணக்​கானோர் பணிநீக்​கம் செய்​யப்​பட்டு வருகின்​றனர்; மேலும் பல ஆயிரம் ஊழியர்​கள் வேறு பிரிவுகளுக்கு மாற்​றப்​பட்டு வரு​கின்​றனர்.