ஆந்திரா, டிச.4-
ஆந்திரா, தெலுங்காகாவில் பல மாவட்டங்களில் நிலநடுகம் உணரப்பட்டது. தெலுங்கானாவில், ஐதராபாத், ஹனுமகெண்டா, கம்மம், பத்ராத்ரி, கொத்தகுடேம் மாவட்டங்களிலும், ஆந்திராவில் விஜயவாடா, ஜக்கையாபேட்டை, திருவூரு, கம்பாலகுடேம் மாவட்டங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 7.27 மணிக்கு பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.