அதிகாலையில் மனைவியை வெட்டி கொன்ற கணவன் கைது

ஷிமோகா, டிச. 11: ஷிமோகா மாவட்டத்தில் அதிகாலையில் பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. கணவன் மனைவியை வெட்டி படுகொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஷிகாரிபுரா நகரின் ராகவேந்திரா பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நாகராஜ் தனது மனைவி ரேணுகாவை (40) அதிகாலையில் வெட்டிக் கொன்றார்.
இது குறித்து குடும்பத்தினர் கூறுகையில், நேற்று முன்தினம் இரவு நாகராஜ், ரேணுகா இடையே தகாத உறவால் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு காரணமாக அதிகாலை 4 மணியளவில் நாகராஜ் தனது மனைவி ரேணுகாவை வெட்டிக் கொன்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த ஷிகாரிபுரா டவுன் ஸ்டேஷன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நாகராஜை கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
நாகராஜ் பயணிகள் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மனைவியைக் கொன்றதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.என்றாலும் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக இந்த படுகொலை நடந்து இருக்கலாம் என்று அந்த பகுதியில் பேசப்படுகிறது கொலை நடந்த இடத்தில் போலீசார் மற்றும் தலையை வெயில் நிபுணர்கள் ஆதாரங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . படுகொலையை நடந்த இடத்தில் பரபரப்பு நிலவுகிறது